Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகனின் முதல் விமான பயணம்.... உற்சாக பதிவிட்ட ஹர்திக் பாண்டியா!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார்.

இதையொட்டி தன்னுடைய பயணத்தை நேற்றைய தினம் துவக்கிய ஹர்திக் பாண்டியா, உடன் தன்னுடைய மகன் அகஸ்தியாவையும் அழைத்து வந்துள்ளார்.

தன்னுடைய மகனின் முதல் விமானப்பயணம் இது என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

குடும்பத்தினர் தங்க அனுமதி

குடும்பத்தினர் தங்க அனுமதி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், அதையொட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னையில் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர். இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் தங்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

மகனுடன் ஹர்திக் பாண்டியா

மகனுடன் ஹர்திக் பாண்டியா

இதையடுத்து சில வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்னை வந்துள்ளனர். இந்நிலையில் ஆல்-ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா தனது மகன் அகஸ்தியாவை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். தன்னுடைய மகனுடன் விமானத்தில் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தனது மகனின் முதல் விமான பயணம் என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

மகனுடன் பயணம்

மகனுடன் பயணம்

கடந்த ஆண்டில் அகஸ்தியா பிறந்த சிறிது நாட்களில் ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் பங்கேற்பதற்காக வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், சில மாதங்கள் கழித்தே தன்னுடைய மகனை மீண்டும் சந்தித்தார். இந்நிலையில் தன்னுடைய மகனை மீண்டும் பிரிய விரும்பாத பாண்டியா தற்போது மகனையும் உடன் அழைத்து வந்துள்ளார்.

இடம்பெற்ற ஹர்திக்

இடம்பெற்ற ஹர்திக்

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். இதையொட்டி சென்னை வந்துள்ள அவர், 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்டு பயிற்சி ஆட்டங்களிலும் தொடர்ந்து போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளார்.

Story first published: Friday, January 29, 2021, 18:01 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+