8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்..!! இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்
லண்டன்:தோனி தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போது சாதரண ரசிகனாக வெற்றியை கொண்டாடிய புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
வரும் 30ம் தேதி தொடங்கும் உலக கோப்பையில் பங்கேற்க இங்கிலாந்து சென்றிருக்கிறது இந்திய அணி. இந்த முறை ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் என பலர் முதன்முதலாக உலக கோப்பையில் விளையாடுகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் பேட்ஸ்மென்களுக்கு சாதகமானவை என்பதால், 500 ரன்கள் வரை எடுக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி இருக்கின்றனர். எனவே, போட்டிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா தனது டுவிட்டரில், பழைய புகைப்படத்தை பகிர்ந்திருந்து, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
2011ல் உலக கோப்பையை வென்றபோது இந்தியா அணி வெற்றியை ரசிகனாக கொண்டாடினேன். இப்போது இந்திய அணிக்காக 2019ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவது வரை, கனவு நிஜமாகியிருக்கிறது என்றார்.
அதை குறிப்பிட்டு சொல்லும் வகையில், 2011ம் ஆண்டு அவருடைய அப்போதைய புகைப் படத்தையும், இங்கிலாந்தில் தற்போது இந்திய அணி வீரர்களுடன் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் இணையத்தில் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications