விழியில் விழி மோதி திறந்த இதயக்கதவு... நடாஷாவுடன் புகைப்படம் வெளியிட்ட பாண்டியா
துபாய் : தற்போது ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இதையொட்டி துபாயில் உள்ளார்.
Recommended Video
கடந்த 30ம் தேதி பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அகஸ்தியா என்று பெயரிட்டுள்ளது பாண்டியா -நடாஷா ஜோடி.
இந்நிலையில் தற்போது நடாஷாவுடன் தான் இருக்கும் பழைய அழகான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.

துபாயில் முகாமிட்டுள்ள பாண்டியா
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும்வகையில் துபாயில் முகாமிட்டுள்ளார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ள அவர், கடந்த சில மாதங்களாக தன்னுடைய முதுகுவலி காரணமாக இந்திய அணியின் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார். மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ள பாண்டியாவின் ஆட்டத்தை காண அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த 30ம் தேதி குழந்தை
கடந்த ஜனவரி மாதத்தில் பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்குடனான தன்னுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்த ஹர்திக் பாண்டியா, கடந்த மே மாதத்தில் அவரது கர்ப்பத்தை அறிவித்தார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி இந்த ஜோடிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. அகஸ்தியா என்று தங்களின் குழந்தைக்கு பெயரிட்டுள்ளது இந்த இணை.

தனி ரசிகர்கள் வட்டம்
இவர்களின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளுக்கென்று தனியாக ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது. இவர்கள் நின்றால், நடந்தால் அது செய்தியாகி விடுகிறது. ஆனால் அவர்கள் நின்று நடந்து போஸ்ட் போடுவதில்லை, தங்களது வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். அந்த கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கும் இடம் கொடுக்கிறார்கள். அவர்களும் பதிலுக்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் ஷேர்களையும் அள்ளி தெளிக்கிறார்கள்.

அள்ளிய லைக்ஸ்கள்
ஐபிஎல் போட்டிகளை விளையாடுவதற்காக தற்போது துபாயில் உள்ள ஹர்திக் பாண்டியா, தனது இரண்டு ஏஞ்சல்களை மிஸ் செய்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு போஸ்ட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது நடாஷாவுடன் தான் வித்தியாசமான போஸ் கொடுக்கும் பழைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் ஹர்திக். இதற்கும் லைக்ஸ் அள்ளுகிறது. இந்த புகைப்படத்திற்கு நடாஷாவும் கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications