அதிர்ச்சியாக இருக்கு.. பிசிசிஐயை மறைமுகமாக சாடிய ஹர்திக்.. வெற்றி பெற்றது எப்படி என விளக்கம்
லக்னோ : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அமைக்கப்பட்ட ஆடுகளம் குறித்து ஹர்திக் பாண்டியா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 100 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி கடும் போராட்டத்திற்குப் பிறகு ஒரு பந்து எஞ்சிய நிலையில் தான் எட்டி வெற்றி பெற்றது.
ஆடுகளம் தரக்குறைவாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார் அதேபோன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் டிக்கெட் வாங்கி பார்த்த இந்த போட்டி அவர்களுக்கு ஏமாற்றம் கொடுத்திருக்கும் என நியூசிலாந்து வீரர் ஜிமி நீசம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெற்றி பெற்ற பிறகு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ஹர்திக் பாண்டியா ஆடுகளம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

பதற்றம் கூடாது
அவர் பேசியதாவது இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே நம்பினேன். ஆனால் வெற்றி மிகவும் தாமதமாக கிடைத்தது. இது போன்ற போட்டிகளில் சின்ன சின்ன தருணங்கள் கூட மிகவும் முக்கியமாகும். ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் பதற்றப்படக்கூடாது. ரிஸ்க் எதுவும் எடுக்காமல் சிங்கிள்ஸ் எடுக்கவே அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ச்சி
அப்படி செய்தால் நம் மீது இருக்கும் அழுத்தம் குறையும். இந்த யுத்தியை பயன்படுத்தியே நாங்கள் விளையாடினோம். நானும் சூரிய குமார் யாதவும் அடிப்படை விஷயத்தில் கவனம் செலுத்தினோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆடுகளத்தை பார்த்து எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் விளையாடிய இரண்டு ஆடுகளமும் டி20 போட்டிக்கு ஏற்றது கிடையாது. கடினமான ஆடுகளத்தில் விளையாடுவது குறித்து எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை.

முன்கூடியே செய்திருக்கனும்
சவால்களை எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக தான் இருக்கிறோம். ஆனால் டி20 போட்டிக்கு ஏற்ற ஆடுகளும் கிடையாது. ஆடுகளம் அமைப்பது எங்கேயோ பிரச்சனை இருந்திருக்கிறது. ஆடுகளப் பராமரிப்பாளர் அல்லது மைதான நிர்வாகிகள் நாங்கள் டி20 போட்டி விளையாட போகிறோம் என்று தெரிந்தும் முன்கூட்டியே ஆடுகளத்தை தயாரித்து இருக்க வேண்டும். மற்றபடி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

பனிப்பொழிவு
இந்த ஆடுகளத்தில் 120 ரன்கள் அடித்தால் அது வெற்றி இலக்காக இருக்கும். பந்துவீச்சாளர்கள் எங்களுடைய பிளான் படியே செயல்பட்டார்கள். நியூசிலாந்து வீரர்கள் சிங்கிள்ஸ் எடுக்க கூட விடாமல் கடும் நெருக்கடி கொடுத்தார்கள். எங்களுடைய பந்துவீச்சாளர்களை நாங்கள் சுழற்சி முறையில் சிறப்பாக செயல்படுத்தினோம். ஆட்டத்தில் பனிப் பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. போட்டியில் இரண்டாவது பாதியில் வீசிய நியூசிலாந்து வீரர்கள் எங்களை விட பந்தை சிறப்பாக ஆடுகளத்தில் வீசினார்கள்.பங்கு நன்றாகவும் திரும்பியது.

15 ரன்கள்
இந்த ஆடுகளும் நிச்சயம் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் தான் கொடுத்திருக்கிறது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்டனர், எங்களுடைய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு கடும் நெருக்கடி கொடுத்திருந்தார்கள். நாங்கள் பேட்டிங்கில் கூடுதலாக 10, 15 ரன்கள் சேர்த்து இருந்தால் ஆட்டத்தில் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும்.

பாராட்டு
சூரிய குமாரும் ஹர்திக்கும் நெருக்கடியான சமயத்தில் அமைதியாக நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதை பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் 16, 17 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்களை வைத்தே பயன்படுத்தினோம் .இது எங்களுக்கு வித்தியாசமான அணுகுமுறை என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications