Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த பெண்ணையும் இப்படி புகைப்படம் எடுக்க கூடாது.. காதலிக்காக குரல் கொடுத்த ஹர்திக் பாண்டியா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சமூக வலைத்தளத்தில் புகைப்பட பத்திரிக்கை கலைஞர்களை கடுமையாக சாடி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். காயத்திலிருந்து தற்போது இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று விளையாடுகிறார்.

இந்த நிலையில் முதல் மனைவியுடன் விவாகரத்து ஆன நிலையில் ஹர்திக் பாண்டியா மஹிக்கா ஷர்மா என்ற பெண்ணுடன் டேட்டிங் செய்து வருகிறார். அண்மையில் மும்பையில் உள்ள பந்தாரா ரெஸ்டாரண்டில் இருவரும் உணவு அருந்தி சென்றுவிட்டு வெளியே வந்தனர்.

Hardik Pandya Mahieka

அப்போது பத்திரிக்கையாளர்கள் மஹிக்கா சர்மாவையை தவறான ஆங்கிலில் ஒரு புகைப்படம் எடுத்தனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியது. முகம் சுளிக்கும் விதமாக அந்த புகைப்படம் இருந்தது. தற்போது இதற்கு ஹர்திக் பாண்டியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பொது வாழ்க்கையில் வந்த பிறகு எங்கள் மீது எப்போதும் தேவையில்லாத கவனம் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். எனினும் இந்த பகுதியை கொண்ட வாழ்க்கையை தான் நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம். ஆனால் இன்று நடந்த சம்பவம் எல்லையை மீறிய ஒன்றாக இருக்கிறது.

மாடியில் இருந்து மஹிக்கா, பந்தாரா ரெஸ்டாரண்டில் இருந்து கீழே இறங்கி வந்தார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் சிலர் அவரை கீழ் ஆங்கில் இருந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். எந்த ஒரு பெண்ணையும் அப்படி புகைப்படம் எடுத்திருக்கக் கூடாது. எங்களுக்குள் இருந்த சிறிய தனிப்பட்ட தருணம் மலிவான ஒரு விஷயமாக மாறிவிட்டது.

இது உங்களுடைய தலைப்பு செய்திக்கான விஷயம் கிடையாது. இது அடிப்படை மரியாதைக்குரிய விஷயமாகும். பெண்களுக்கு எப்போதுமே மரியாதை தர வேண்டும். அனைவருக்குமே எல்லைகள் இருக்கின்றது. ஊடக நண்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நீங்கள் கடுமையாக உழைத்து வருகிறீர்கள். உங்களுடைய உழைப்புக்கு நான் எப்போதுமே மரியாதை தருவேன்.

உங்களுடன் எப்போதுமே நான் ஒத்துழைப்பு தருவேன். ஆனால் இனி இப்படி ஒரு விஷயத்தை செய்யாதீர்கள். கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் புகைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அனைத்து ஆங்களிலும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். மனிதத்துடன் கொஞ்சம் நடந்து கொள்ளுங்கள். நன்றி! என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 9, 2025, 17:20 [IST]
Other articles published on Dec 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+