Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லவேளை நாங்க டாசை இழந்தோம்.. இல்ல நாங்க சிக்கி இருப்போம்.. வெற்றி குறித்து ஹர்திக் கிண்டல்

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி 50 ரன்களில் ஆட்டம் இழக்க அதனை இந்தியா 6 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் எட்டி எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சனாக்கா முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மாவும் நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம் என்று கூறினார்.

Hardik Pandya speaks luckily rohit sharma lose the toss in final

நல்லவேளை ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் டாசை இழந்தது இந்தியாவுக்கு நன்மையாக அமைந்திருக்கிறது. இது குறித்து பேசிய இந்திய அணி துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, அணி வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் பல கருத்துக்களை கூறினார்.ஆட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், ஒரு அணியாக ஆட்டத்தை எப்படி முடிக்க வேண்டும் என்று நாங்கள் அதிகம் பேசி இருக்கிறோம்.

நெருக்கடியான போட்டியில் கூட எதிரணியை எப்படி அடித்து ஆட வேண்டும் என்பது குறித்தும் பலமுறை பேசியிருக்கிறோம். நல்லவேளையாக இந்த போட்டியில் நாங்கள் டாசை இழந்தோம். ஏனெனில் இன்றைய போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருந்தோம். எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

குறிப்பாக முஹம்மது சிராஜின் பந்துவீச்சு பிரமிக்கும் அளவில் இருந்தது. பந்தை அவர் ஸ்விங் செய்த விதம் எங்களுக்கு விக்கெட் எடுக்க நல்ல வாய்ப்பாக அமைந்தது. பந்து எப்படி வீச வேண்டும்? பேட்ஸ்மேனுக்கு எப்படி நெருக்கடி கொடுக்க வேண்டும். பந்தை எந்த லைனில் வீச வேண்டும் என்பது குறித்து எல்லாம் நாங்கள் அதிக முறை பேசி இருக்கிறோம்.
தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சில ஓவர்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது .

அந்த சமயத்தில் நாம் எப்படி சிறப்பாக பந்துவீசி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அணி கூட்டத்தில் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இன்றைய ஆட்டத்தில் முதல் சில ஓவர்களில் நாங்கள் வீசிய வந்து இலங்கை அணியின் பேட்டில் படவேயில்லை. அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது முகம்மது சிராஜ் தன்னுடைய பந்துவீச்சுருக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அது தற்போது அவருடைய பந்துவீச்சில் தெரிகிறது. உலகக்கோப்பை தொடர்க்கும் முன்பு இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Sunday, September 17, 2023, 18:40 [IST]
Other articles published on Sep 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+