ஹர்திக் பாண்டியாவின் மாஸ் பந்துவீச்சு.. ரன் குவிப்புக்கு பிரேக் போட்டு அசத்தல்.. 3 பேர் அவுட்
சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி, ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடரை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
வார்னர் அணிக்கு திரும்பியும், அவரை நடுவரிசையில் கேப்டன் ஸ்மித் களமிறக்கினார். இதனால் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.
இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி , கடந்த போட்டியை விட இன்று கொஞ்சம் நன்றாக பந்துவீசினர்.

அதிரடி ஆட்டம்
ஆனால் முதலில் பொறுமை காத்த மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஜோடி, பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர் இவர்களை கட்டுப்படுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. இதனால், இன்று இலக்கு 350க்கு மேல் போய்விடும் என்ற பயம் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் இதனை அனைத்தும் ஹர்திக் பாண்டியா மாற்றிவிட்டார்.

பாண்டியா அபாரம்
விக்கெட்டுகளை வீழ்த்த ஷமி, சிராஜ் தடுமாறிய போது ஹர்திக் பாண்டியா தனது லாவகமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் தூககி தெர்ட் மேன் திசையில் அடித்தார். அப்போது அங்கு நின்றிருந்த பில்டர் கேட்ச் பிடிக்க, ஹெட் 31 பந்தில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஸ்மித் டக் அவுட்
இதனையடுத்து கேப்டன் ஸ்மித் களத்துக்கு வந்தார். அப்போது பந்துவீசிய ஹர்திக் பாண்டியா, கொஞ்சம் லெங்தை மாற்றி வீசினார். அப்போது ஸ்மித் பந்தை டிரைவ் செய்ய, ஆனால் பந்து பேட்டில் பட்டு கீப்பர் ராகுலிடம் பிடிப்பட்டார்.

ஹர்திக் அபாரம்
இதனையடுத்து, அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ், ஹர்திக் பந்தை அடிக்க முயன்ற போது இன்சைட் எட்ஜாகி ஆட்டமிழந்தார். இதன் மூலம் 85 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது. ஹர்திக் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 20 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார்.


Click it and Unblock the Notifications