Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்ட்யாவின் பலவீனம் இதுதான்.. உஷாரான எதிரணி பவுலர்கள்.. டிராவிட் எடுத்த அதிரடி முடிவு!

அடிலெய்ட்: இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா, தனது பலவீனத்தை எதிரணிகள் கண்டுபிடித்துவிட்டதால் அதனை உடனடியாக சரி செய்ய ஸ்பெஷல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை முதல் அரையிறுதி சுற்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் சூழலில் 2வது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அடிலெய்ட் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹர்திக் பாண்ட்யா பயிற்சி

ஹர்திக் பாண்ட்யா பயிற்சி

இந்திய அணியில் அனைத்து வீரர்களும் வழக்கமான பேட்டிங்கை மேம்படுத்த பயிற்சி மேற்கொண்ட நிலையில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் டிராவிட்டிடம் ஸ்பெஷல் பயிற்சியை பெற்றார். இதற்கு காரணம் அவரின் பலவீனத்தை எதிரணிகள் கண்டறிந்தது தான். ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவதில் தான் ஹர்திக் ஸ்பெஷலிஸ்ட். ஆனால் அதே பந்து தான் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பேட்டிங்கில் எமனாக இருக்கிறது.

தொடர்ந்து சொதப்பல்

தொடர்ந்து சொதப்பல்

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா, பாகிஸ்தானுடனான போட்டியில் மட்டும் தான் 40 ரன்களை அடித்தார். அதன்பின்னர் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வருகிறார். அவருக்கு ஷார்ட் பிட்ச் மூலம் வியூகம் வகுத்து அழகாக எதிரணி பவுலர்கள் விக்கெட் எடுக்கின்றனர். குறிப்பாக தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போட்டிகளில் அவர் அதில் தான் அவுட்டானார்.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

இங்கிலாந்து அணியில் உள்ள பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் பவுன்சர்கள் வீசுவதில் கைதேர்ந்தவர்கள். எனவே அவர்கள் தனது பலவீனத்தை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக ஹர்திக் பாண்ட்யா இன்று ஸ்பெஷலாக பவுன்சர் பந்துகளை சந்திக்க மட்டும் பயிற்சி எடுத்துள்ளார். த்ரோ டவுன், பவுலர்கள் என அனைவருமே அதனையே வீசியுள்ளனர்.

பாண்ட்யா தான் கடைசி

பாண்ட்யா தான் கடைசி

அடிலெய்டில் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சற்று சாதகமாக மாறி வருவதால் அக்‌ஷர் பட்டேலுக்கு மாற்றாக சாஹல் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் பாண்ட்யா தான் இந்தியாவின் கடைசி பேட்டிங் நம்பிக்கையாக இருப்பார். எனவே அவர் இங்கிலாந்து போட்டியில் அதிரடி காட்ட வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

Story first published: Tuesday, November 8, 2022, 19:09 [IST]
Other articles published on Nov 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+