Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்றா வெடிய.. டெஸ்டிற்கு வரும் ஹர்திக் பாண்ட்யா.. வேறு வழியின்று பிசிசிஐ எடுத்த முடிவு.. எப்போது?

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் கம்பேக் கொடுப்பது குறித்து மகிழ்ச்சியான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் மும்முரமாக விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 2 - 1 என முன்னிலையில் உள்ள சூழலில் கடைசி போட்டியில் வெற்றிக்காக போராடி வருகிறது.

இதில் வெற்றி கண்டுவிட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடலாம். இங்கிலாந்தில் நடக்கவுள்ள அந்த போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவை தான் எதிர்கொள்ளவுள்ளனர்.

பாண்ட்யாவின் ஃபார்ம்

பாண்ட்யாவின் ஃபார்ம்

இந்நிலையில் தான் ஹர்திக் பாண்ட்யாவின் டெஸ்ட் கம்பேக் குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளன. காயம் காரணமாக படு மோசமான ஃபார்மில் இருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த ஐபிஎல் தொடர் மூலம் அட்டகாசமான கம்பேக் கொடுத்தார்.கேப்டன் என்ற புதிய அவதாரத்தையும் எடுத்து தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். ஆனால் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை போன்று டெஸ்டிற்கு மட்டும் இன்னும் வராமல் உள்ளார்.

 புதிய முடிவு

புதிய முடிவு

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப்படியான ஓவர்கள் வீச வேண்டியிருக்கும் என்பதால் அந்த பணிச்சுமையை அவரால் தாங்க முடியுமா என்ற விவாதம் இருந்து வருகிறது. இதனால் தான் அவருக்கு ஓய்வு கொடுத்து வருகின்றனர்.எனினும் தற்போது அவரை அழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்காக அவருடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

என்ன காரணம்

என்ன காரணம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கடந்த முறையே இந்தியா சொதப்பியது. எனவே இந்த முறை பலமான அணியை உருவாக்க வேண்டும் என்று பார்த்தால் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் விலகிவிட்டனர். இதனால் பாண்ட்யாவை உள்ளே கொண்டு வந்தால் பவுலிங், பேட்டிங் என வலுசேர்ப்பார் எனத்தெரிகிறது. மேலும் கேப்டன்சியிலும் ரோகித்திற்கு உதவியாக இருப்பார்.

3 மாத கால அவகாசம்

3 மாத கால அவகாசம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கிறது. இதற்கு இன்னும் 3 மாதங்கள் முழுமையாக உள்ளது என்பதால் எந்தவித அவசரமும் இன்றி தயாராகும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக தேர்வுக்குழு அதிகாரிகளும், அணி பயிற்சியாளர்களும் ஸ்பெஷல் பயிற்சியை கொடுத்து வருகின்றனர்.

Story first published: Thursday, March 9, 2023, 15:48 [IST]
Other articles published on Mar 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+