For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பண்டியா டெஸ்ட் போட்டிக்கு சரிபட்டு வருவாரா? மாட்டாரா?

Recommended Video

ஒரு புகைப்படத்தால் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட பாண்டியா- வீடியோ

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பையில் பங்கேற்க துபாய்க்கு சென்றுள்ளது. அந்த அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பண்டியாவும் சென்றுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து திரும்பிய அவர் ஒரு செல்பி எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அதில் ஏதோ ஒரு கேங்ஸ்டர் போல அணிகலன்கள் மற்றும் உடையணிந்து, மகிழ்ச்சியோடு இருப்பது போல அந்த புகைப்படம் இருந்தது.

அதில் இங்கிலாந்து தோல்வி பற்றி அவர் கூறியது வேறு ரசிகர்களை எரிச்சலூட்டும் வகையில் இருந்தது.

என்ன சொன்னார் பண்டியா

என்ன சொன்னார் பண்டியா

அதில் பண்டியா "இந்தியாவுக்கு திரும்பிவிட்டோம். அந்த (இங்கிலாந்து டெஸ்ட்) தொடரின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், நாங்கள் நன்றாக போராடினோம்" என குறிப்பிட்டு இருந்தார். ரசிகர்கள் ஏற்கனவே இவர் மீதி கடுப்பில் இருப்பதால், இந்த புகைப்படத்துக்கு கீழே அவரை கேலி செய்தும், திட்டியும் வருகிறார்கள். நிறைய பேர் இவர் டெஸ்ட் கிரிக்கெட் ஆட லாயக்கில்லை என கூறி வருகிறார்கள்.

பண்டியா இதுவரை...

பண்டியா இதுவரை...

பண்டியா டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்து இருக்கிறார்? எத்தனை ரன்கள், விக்கெட்கள் எடுத்து இருக்கிறார்? என பார்க்கலாம். இதுவரை 11 டெஸ்டில் ஆடியிருக்கும் பண்டியா, 18 இன்னிங்க்ஸ்களில் 532 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 1 சதம், 4 அரைசதம் அடங்கும். இவரது பேட்டிங் சராசரி 31.29 மட்டுமே. 19 இன்னிங்க்ஸ்களில் 17 விக்கெட்கள் எடுத்திருக்கிறார். அதில் இவரது ஒரு ஓவருக்கு அளிக்கும் ரன்கள் சராசரி 3.38 என்பதாக இருக்கிறது.

இது போதுமா?

இது போதுமா?

ஒரு டெஸ்ட் ஆல் ரவுண்டருக்கு 11 போட்டிகளில் இந்த ரன்கள் மற்றும் விக்கெட்கள் போதுமா? நிச்சயம் போதாது. பேட்டிங் சராசரி 31 என்பது இந்த காலத்தில் மிகவும் குறைவு. அதேசமயம் 11 போட்டிகளில், ஒரு சதம் மற்றும் 4 அரைசதம் என்பது ஒரு நல்ல ஆரம்பமாகவே இருக்கிறது. பந்துவீச்சில் 19 இன்னிங்க்ஸ்களில் வெறும் 17 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். இது குறைவு என்றாலும், இவர் பந்து வீசிய ஓவர்களும் மிக மிக குறைவு. 19 இன்னிங்க்ஸ்களில் வெறும் 157 ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கிறார். சராசரி கணக்கிட்டால் ஒரு இன்னிங்க்ஸுக்கு வெறும் 8-9 ஓவர்கள் மட்டுமே வீசி இருக்கிறார்.

வாய்ப்பு கொடுக்கலாமா?

வாய்ப்பு கொடுக்கலாமா?

பண்டியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கலாமா? என்றால். அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை கொடுத்துப் பார்க்கலாம். அவர் விக்கெட்கள் எடுப்பதில் அதிக முன்னேற்றம் அடைய வேண்டும். அதே சமயம் கேப்டன் இவருக்கு அதிக ஓவர்கள் கொடுக்க வேண்டும். இவர் ஒருய் முழு நேர பந்துவீச்சாளர் என்ற பெயரில் தான் அணியில் இருக்கிறார், எனவே, அதிக ஓவர்கள் கொடுக்க வேண்டும். பேட்டிங்கில் இவர் பரவாயில்லை என்றாலும், முக்கிய நேரங்களில் கை கொடுப்பதில்லை. மேலும், டெஸ்ட் பேட்டிங்கின் சூட்சுமத்தை சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு, ஒரு போட்டியிலாவது டிராவிட் போல நின்று ஆடினால் தான் இவரை டெஸ்ட் பேட்ஸ்மேன் என ஒப்புக் கொள்ளலாம்.

Story first published: Friday, September 14, 2018, 10:35 [IST]
Other articles published on Sep 14, 2018
English summary
Hardik Pandya trolled for his picture shared in instagram and twitter after England loss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+