Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் சோஃபாவில் படுத்து தூங்கினார்.. ஹர்திக் கேப்டன் ஆனது எப்படி.. சேத்தன் சர்மாவின் வாக்குமூலம்

மும்பை : பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவை பொறி வைத்து எலியை பிடிப்பது போல் பத்திரிகையாளர்கள் நேற்று பிடித்த சம்பவம் தான் இந்திய கிரிக்கெட்டில் இன்றைய ஹாட் டாபிக்.

அதுவும், சேத்தன் சர்மா பேசியதை பார்த்த பிறகு தான் தெரிந்தது, இது சாதாரண எலி அல்ல, ஊழல் பெருச்சாளி என்று. சேத்தன் சர்மா எந்த பதவியிலிருந்து சரியில்லை என்று நீக்கப்பட்டு, பிறகு அதே பதவிக்கு வந்தாரோ அப்போதே பலருக்கும் சேத்தன் சர்மா, ஜெய்ஷா மீதான நம்பிக்கை போய்விட்டது.

அப்போதே சேத்தன் சர்மா ஒரு கடைந்து எடுத்த அரசியல்வாதி என்று பலரும் விமர்சித்தனர். தற்போது, அவர் தமது காலில் விழுந்து கிடக்கும் வீரர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை வழங்கியது தெரியவந்துள்ளது.

மோசமான நபர்

மோசமான நபர்

பிசிசிஐயின் 90 ஆண்டுக்கால வரலாற்றில் இப்படி ஒரு மோசமான தேர்வுக்குழு தலைவர் இருந்ததில்லை என்பதை சேத்தன் சர்மா நிரூபித்துவிட்டார். டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு , ரோகித் சர்மாவால் கேப்டனாக அனைத்து பிரிவுகளிலும் தொடர முடியாது என்று ஒரு பேச்சு அடிப்பட்டது.

ஹர்திக் நடவடிக்கை

ஹர்திக் நடவடிக்கை

இதனையடுத்து டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு ஹர்திக் அந்த கிரிக்கெட் வடிவத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பாக சேத்தன்சர்மா தனது வீடியோவில் பேசுகையில் ஹர்திக் பாண்டியா மிகவும் அடக்கமாக நடந்து கொள்வார். என் வீட்டிற்கு அடிக்கடி வந்து என்னை சந்தித்து பேசுவார்.

சோஃபாவில் தூங்குவார்

சோஃபாவில் தூங்குவார்

அவ்வளவு ஏன் இந்த சோபாவில் அமர்ந்து தான் தூங்குவார். ஹர்திக் பாண்டியா தனது எதிர்காலம் குறித்து பலமுறை வந்து பேசி இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் தம்மை வந்து சந்தித்து பேசினால் பெரிய அளவிலான பொறுப்பு கிடைக்கும் என்பதை சேத்தன் சர்மா ஒப்பு கொண்டு விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்த பட்டியல் அத்துடன் நிற்கவில்லை.

வீரர்கள் சந்திப்பார்கள்

வீரர்கள் சந்திப்பார்கள்

ரோகித் சர்மாவும் தம்மிடம் தொலைப் பேசியில் பேசுவார் என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். மேலும், தீபக் ஹூடா, உமேஷ் யாதவ் ஆகியோர் தமது வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தார்கள் என்றும் இந்த வீரர்கள் அனைவரும் தம்மை மிகவும் நம்பினார்கள் என்று சேத்தன் சர்மா கூறியுள்ளார்.

குறுக்கு வழி

குறுக்கு வழி

இதன் மூலம் தம்மை வந்து சந்தித்து சலாம் போட்டால் தான், அணியில் இடம் கிடைக்கும் என்ற பழக்கத்தை சேத்தன் சர்மா உருவாக்கி வைத்திருக்கிறார். பிரித்வி ஷா, சர்பிராஸ் கான் ஆகியோர் எல்லாம் சதம், சதமாக அடித்து வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில், இப்படி ஒரு குறுக்கு வழி இந்திய கிரிக்கெட்டில் இருந்ததே தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Story first published: Wednesday, February 15, 2023, 10:10 [IST]
Other articles published on Feb 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+