Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இதுதான் பிளேயிங் லெவனா? அதுவும் "அந்த" வீரர் மீண்டும் அணிக்குள் வருகிறாரா? செம டிவிஸ்ட்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட போகும் 11 வீரர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் கசிந்து வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட தயாராகிக் கொண்டு இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாகும்.

எப்படி

எப்படி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட போகும் 11 வீரர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் கசிந்து வருகிறது. இந்த மூன்றாவது டெஸ்டுக்காக தற்போது இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து கொண்டு இருக்கிறது. அகமதாபாத்தில் இந்த போட்டி நடக்கிறது.

பிட்ச்

பிட்ச்

இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும். போட்டி நடக்க உள்ள அகமதாபாத் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்ற பிட்ச் ஆகும். பிட்ச் நன்றாக ஸ்விங் ஆகும் வகையில், டர்னர் வகை பிட்சாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அகமதாபாத்

அகமதாபாத்

இதனால் இந்திய அணி இந்த முறை கண்டிப்பாக இரண்டு ஸ்பின் பவுலர்களுடன் செல்லும். அதே சமயம் இது பிங்க் பால் போட்டி என்பதால் இரண்டு பாஸ்ட் பவுலர்களுக்கு பதிலாக மூன்று பாஸ்ட் பவுலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். இதனால் அணியில் இருந்து குல்தீப் நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

 ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இதற்கு பதிலாக இந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா வர இருக்கிறார். இவர் பவுலிங் செய்ய உள்ளார். இவர்தான் ஐந்தாவது பவுலர். 10-15 ஓவர்களை இவர் ஒரு நாளுக்கு வீச வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

மீண்டும் கம்பேக்

மீண்டும் கம்பேக்

அதன்படி இந்திய அணியில் இங்கிலாந்து எதிரான மூன்றாவது டெஸ்டில் ரோஹித் சர்மா, கில், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், பாண்டியா, அஸ்வின் , அக்சர், பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது .

Story first published: Sunday, February 21, 2021, 10:55 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+