உங்க வசதிக்கு எல்லாம் வாய்ப்பு தர முடியாது.. ஆல்ரவுண்டரை வீட்டுக்கு அனுப்பும் பிசிசிஐ.. பின்னணி!
சென்னை: இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டர் வீரராக ஹர்திக் பாண்டியாவிற்கு டெஸ்ட் போட்டிகளில் இனி வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இந்திய அணியில் டாப் வீரராக உருவெடுத்து இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. முழு பார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் புதிய மேட்ச் வின்னராக மாறியுள்ளார்.
பவுலிங்கை விட்டுவிட்டு முழுக்க முழுக்க பேட்டிங்கில் மட்டும் ஹர்திக் பாண்டியா இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இதனால் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் தற்போது புதிய பலம் பெற்றுள்ளது.

பேட்டிங்
2019ம் வருட தொடக்கத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் காலில் செய்யப்பட்ட ஆபரேஷனுக்கு பின் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்வதை நிறுத்துவிட்டார். காயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் பாண்டியா பவுலிங் செய்வது இல்லை.

பவுலிங்
இதனால் கடந்த வருடம் ஐபிஎல் தொடரிலும் இவர் பவுலிங் செய்யவில்லை. காயம் குறித்து மருத்துவர்கள் சொன்ன அறிவுரை காரணமாக இவர் பவுலிங் செய்வதை நிறுத்திவிட்டார் . ஆனாலும் இவர் நன்றாக பேட்டிங் செய்கிறார் என்பதால் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

பேட்ஸ்மேன்
இந்த நிலையில் ஒருநாள், டி 20 அணியில் வேண்டுமானால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் டெஸ்ட் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள். டெஸ்ட் அணியில் ஐந்து பவுலர்கள் தேவை. ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களை இறக்கினால் ஓவர் போட ஆள் போதாமல் போகும்.

நீக்கம்
இதனால் இந்திய டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள். டெஸ்ட் அணியில் பவுலர்கள் முக்கியம். ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் என்பதால்தான் அவர் கவனம் பெற்றார். ஆனால் இப்போது அவர் பேட்டிங் மட்டுமே செய்வேன் என்கிறார்.. இதனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்று பிசிசிஐ நிர்வாகிகள் கருதுகிறார்கள்.


Click it and Unblock the Notifications