Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேம் பினிஷர்... தொடர் நாயகன்... இந்திய அணியின் அதிரடி நம்பிக்கை நட்சத்திரம்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது.

இந்த டி20 தொடரின் தொடர் நாயகனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின்மூலம் தான் மிகச்சிறந்த கேம் பினிஷர் என்பதை அவர் உலகிற்கு நிரூபித்துள்ளார்.

17ம் தேதி டெஸ்ட் போட்டி

17ம் தேதி டெஸ்ட் போட்டி

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. வரும் 17ம் தேதி பகலிரவு டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்ததாக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின்மீது அனைவரின் கவனமும் விழுந்துள்ளது.

முழுமை காட்டிய ஹர்திக்

முழுமை காட்டிய ஹர்திக்

இந்நிலையில் இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேற்கொண்டுள்ளார். இரண்டுமுறை 90 ரன்களையும் மற்ற ஆட்டங்களிலும் சிறப்பான செயல்பாடுகளை அவர் தந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவரது செயல்பாடு குறைந்திருந்தபோதிலும் தொடரில் முழுமை காட்டினார்.

கேம் பினிஷர்

கேம் பினிஷர்

இந்நிலையில் இந்த டி20 தொடரின் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தான் சிறப்பான ஒரு கேம் பினிஷர் என்பதை அவர் இந்த தொடர்களின் மூலம் சிறப்பாக நிரூபித்துள்ளார். மேலும் சிறந்த ஆட்டக்காரராகவும் அவர் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

சிறப்பான கேம் பினிஷர்

சிறப்பான கேம் பினிஷர்

கடந்த ஒருநாள் தொடரில் 76 பந்துகளில் 90, 31 பந்துகளில் 28 மற்றும் 76 பந்துகளில் 92 ரன்களை அவர் குவித்தார். இதேபோல டி20 போட்டிகளிலும் 15 பந்துகளில் 16 ரன்களும் 22 பந்துகளில் 42 ரன்களும் அவர் எடுத்ததுடன் இந்த போட்டிகளில் சிறப்பான கேம் பினிஷராகவும் அவர் தன்னை நிரூபித்தார்.

Story first published: Tuesday, December 8, 2020, 18:32 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+