Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே vs மும்பை போட்டியை காண வந்த ஜாஸ்மின் வாலியா.. விவாகரத்துக்கு முன்பே உறவில் இருந்த ஹர்திக்?

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிவதாக ஜூலை 18ஆம் தேதி அறிவித்தனர். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஹர்திக் பாண்டியாவின் பெயரினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அகற்றினார் நடாஷா ஸ்டான்கோவிக். ஐபிஎல் தொடரின் போதும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக நேரில் வரவில்லை.

இந்த நிலையில் விவாகரத்திற்கு பின்னர் ஹர்திக் பாண்டியா புதிய உறவில் இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது. பிரிட்டிஷ் பாடகியும், தொலைக்காட்சி நடிகையுமான ஜாஸ்மின் வாலியாவுடன் ஹர்திக் பாண்டியா கிரீஸில் நாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். இருவரும் ஒரே இடத்தில் இருந்து தனித்தனியே பதிவிட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

ipl 2025 Hardik Pandya Natasha Stankovic Jasmin Walia

இதன்பின் இருவரும் இன்ஸ்டாகிராம் தங்களை பின் தொடர்வதும் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போதே ஜாஸ்மின் வாலியாவுடன் ஹர்திக் பாண்டியா காதலில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஜாஸ்மின் வாலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே - மும்பை இடையிலான போட்டியை வான்கடே மைதானத்தில் காண நேரில் வந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் ஜாஸ்மின் வாலியா பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இலங்கை டி20 தொடருக்கான ஹர்திக் பாண்டியா கொழும்பு சென்ற போதும், ஜாஸ்மின் வாலியா இலங்கையிலேயே இருந்திருக்கிறார். ஜூலை 27ஆம் தேதியன்று இலங்கை - இந்தியா இடையிலான டி20 தொடர் தொடங்கியது. அன்றைய நாளில் ஜாஸ்மின் வாலியா இலங்கை இருப்பதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதன்பின் ஆகஸ்ட் 4ஆம் தேதி இலங்கையில் இருந்து நேரடியாக கிரீஸ் பயணம் மேற்கொண்டுள்ளதை ஜாஸ்மின் வாலியா பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக ஜாஸ்மின் வாலியாவுடன் ஹர்திக் பாண்டியாவும் பயணித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவும் தற்போது கிரீஸ் நாட்டில் தான் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

இதன் மூலம் நடாஷாவுடனான பிரிவிற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா ஜாஸ்மின் வாலியாவுடன் காதலில் இருந்ததாக ரசிகர்களிடையே விவாதங்கள் நடந்து வருகின்றன. இதனால் ஹர்திக் பாண்டியா மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்த காதல் உறவு காரணமாகவே ஹர்திக் பாண்டியா திருமண உறவில் இருந்து வெளி வந்ததாகவும் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

Story first published: Thursday, August 15, 2024, 6:00 [IST]
Other articles published on Aug 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+