Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்த ஹர்மன்பிரித் கவுர்.. இந்தியாவுக்கு 152 ரன்கள் நிர்ணயித்த இங்கிலாந்து

டர்பன் : மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை இன்று எதிர்கொண்டது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்மன்பிரித் கவர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இந்த போட்டியில் வென்றால் இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

அபார கேட்ச்

அபார கேட்ச்

இதனால் இந்திய வீராங்கனைகள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டேனி வியாட் டக் அவுட்டாகி வெளியேறினார். அவரது பந்தை விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ் அபாரமாக கேட்ச் பிடித்து ஆட்டம் இழக்க வைத்தார். இதேபோன்று அலைஸ் கேப்சி 3 ரன்களிலும் சோபியா 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

அரைசதம்

அரைசதம்

இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 29 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை எடுத்து அணி சரிவை நோக்கி சென்ற நிலையில் கேப்டன் ஹேத்தர் நைட் மற்றும் நாட் சிவர் ஜோடி அபாரமாக விளையாடினர். கேப்டன் ஹேத்தர் நைட் 28 ரன்களில் வெளியேற பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் சிவர் 42 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

5 விக்கெட்

5 விக்கெட்

இதேபோன்று விக்கெட் கீப்பர் வீராங்கனை அமி ஜோன்ஸ் அபாரமாக விளையாடி 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 151களுக்கு 7 விக்கெட் எடுத்தது. இந்திய வீராங்கனைகள் தரப்பில் ரேணுகா சிங் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ஹர்மன்பிரித் கவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஹர்மன்பிரித் சாதனை

ஹர்மன்பிரித் சாதனை

அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி ஹர்மன்பிரித் கவுர் 149 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் சூசி பேட்ஸ் 142 போட்டிகள் உடனும், டேனில் வியாட் 141 போட்டிகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Saturday, February 18, 2023, 20:47 [IST]
Other articles published on Feb 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+