For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடுவரை அசிங்கமாக திட்டிய இந்திய மகளிர் கேப்டன்.. ஸ்டம்பை பேட்டால் அடித்து கோபம்.. என்ன நடந்தது?

மிர்பூர் : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் நடுவரை அசிங்கமாக திட்டி விட்டு ஸ்டெம்பை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நாள் தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கு சமணில் இருந்த நிலையில் கடைசி ஒரு நாள் போட்டியை யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களை கோப்பையை தட்டி செல்வார்கள் என்ற நிலை இருந்தது.

Harmanpreet kaur angry moment after umpire gives wrong decision

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 225 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதில் வங்கதேச அணியில் தொடக்க வீராங்கனை ஃபர்கானா அபாரமாக விளையாடி 17 ரன்களை சேர்த்தார். இதனை அடுத்து 226 ரன்கள் என்ற சவாலான இலக்கை எதிர்கொண்டு விளையாடிய இந்திய மகளிர் அணியில் ஸ்ருதி மந்தானா 59 ரன்களும், ஹர்லின் தியோல் 77 ரன்களும் எடுத்திருந்தனர்.

மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் திரும்ப ஜெமிமா மட்டும் தனி ஆளாக போராடி 33 ரன்கள் சேர்த்தார். இதில் இந்திய மகளிர் அணி 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் போட்டி டையில் முடிவடைந்தது. இதற்குக் காரணம் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுருக்கு நடுவர் தவறான முடிவு வழங்கியதுதான் என்று கூறப்படுகிறது. இதில் ஹர்மன்பிரித் கவுர் 14 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்வீப் ஷாட் ஆடினார்.

அப்போது இன்சைட் எட்ஜ் ஆகி காலில் பந்து பட்டது. ஆனால் நடுவர் இன்சைட் எட்ஜ் ஆனதை கண்டுகொள்ளாமல் அவுட்டு வழங்கினார். இதனால் கோபமடைந்த ஹர்மன்பிரித் கவுர் பேட்டால் ஸ்டெம்பை அடித்து நொறுக்கினார். மேலும் நடுவரை பார்த்து தகாத வார்த்தையில் திட்டிக்கொண்டே பெவிலியன் நோக்கி சென்றார்.

விட்டு இருந்தால் நடுவரையே ஹர்மன்பிரித் கவுர் களத்திலேயே பொளந்து இருப்பார்.அந்த அளவிற்கு வெறியுடன் பெவிலியன் நோக்கி சென்றார். இந்த போட்டி முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்மன்பிரித் மிகவும் மோசமான முடிவுகள் நடுவர்களால் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டினார். அடுத்த முறை வங்கதேசத்துடன் விளையாடும் போது இது போன்ற நடுவர்களையும் சமாளித்துக் கொண்டுதான் விளையாட வேண்டும் என நினைக்கிறேன் என்றும் ஹர்மன்பிரித் கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 22, 2023, 23:11 [IST]
Other articles published on Jul 22, 2023
English summary
Harmanpreet kaur angry moment after umpire gives wrong decision
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+