சாதனை மேல் சாதனை.. 9000 ரன்களை கடந்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்.. லார்ட்ஸ் மைதானத்திலும் புதிய சரித்திரம்
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வரலாற்று சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 9000 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹர்மன்ப்ரீத் கவுர் 58 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியின் போது அவர் 13 ரன்களைக் கடந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் தனது 9000 ரன்கள் மைல்கல்லை எட்டினார்.

அதேபோல, இந்தப் போட்டியில் அவர் அடித்த அரைசதம் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அரைசதம் அடித்த முதல் இந்தியர், அதாவது ஆடவர் மற்றும் மகளிர் பிரிவை சேர்த்து இதை செய்து அரிய சாதனை படைத்தார். மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடப்படும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால், இந்தச் சாதனையை செய்த உலகின் முதல் பெண் கிரிக்கெட் வீரரும் அவரே ஆவார்.
ஹர்மன்ப்ரீத் கவுரின் சாதனைகள்:
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:
- மிதாலி ராஜ் - 333 போட்டிகளில் 10868 ரன்கள்
- ஸ்மிருதி மந்தனா - 300 போட்டிகளில் 10667 ரன்கள்
- ஹர்மன்ப்ரீத் கவுர் - 374 போட்டிகளில் 9045 ரன்கள்
லார்ட்ஸ் மைதானத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரின் அரைசதங்கள்:
- ஒருநாள் போட்டி: 50 ரன்கள் (எதிரணி: இங்கிலாந்து, தேதி: ஜூலை 1, 2012)
- ஒருநாள் போட்டி: 51 ரன்கள் (எதிரணி: இங்கிலாந்து, தேதி: ஜூலை 23, 2017)
- டி20 போட்டி: 56 ரன்கள் (எதிரணி: ஆஸ்திரேலியா, தேதி: ஜூன் 28, 2026)
- டெஸ்ட் போட்டி: 58 ரன்கள் (எதிரணி: இங்கிலாந்து, தேதி: ஜூலை 10, 2026)
லார்ட்ஸ் மைதானத்தில் மூன்று வடிவங்களிலும் அரைசதம் அடித்த வீரர்கள்:
- மஹிலா ஜெயவர்த்தனே (இலங்கை)
- குமார் சங்ககாரா (இலங்கை)
- யூனிஸ் கான் (பாகிஸ்தான்)
- ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா)
மந்தனா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் அரைசதம்.. லார்ட்ஸ் மகளிர் டெஸ்ட்டில் இந்தியா 285 ரன்னுக்கு ஆல் அவுட்
ஹர்மன்ப்ரீத் கவுரின் சர்வதேச கிரிக்கெட் புள்ளிவிவரங்கள்:
- டெஸ்ட் போட்டிகள்: 8 போட்டிகளில் 288 ரன்கள் (அதிகபட்ச ரன்கள்: 69)
- ஒருநாள் போட்டிகள்: 164 போட்டிகளில் 4541 ரன்கள் (அதிகபட்ச ரன்கள்: 171*)
- டி20 போட்டிகள்: 202 போட்டிகளில் 4126 ரன்கள் (அதிகபட்ச ரன்கள்: 103)
- ஒட்டுமொத்த ரன்கள்: 374 போட்டிகளில் 9045 ரன்கள் (8 சதங்கள், 44 அரைசதங்கள்)


Click it and Unblock the Notifications