Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்டை காப்பி அடித்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்.. என்ன செய்யுறார்னு பாருங்க?

லண்டன்: இந்தியாவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டின் தனித்துவமான ஸ்டைலை, இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் அப்படியே காப்பி அடித்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாரி ப்ரூக்கின் இந்த செயலைப் பார்த்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மார்கன், அவர் எதற்காக இப்படி செய்கிறார் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.

Harry Brook Copies Rishabh Pant s Flip Style Former Captain Eoin Morgan Explains Why

ரிஷப் பண்ட்டாக மாறிய ஹாரி ப்ரூக்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் தொடரில் ஒரு போட்டிக்கு முன்னதாக இந்த சுவாரஸ்யமான நிகழ்வு அரங்கேறியது. ஹாரி ப்ரூக், பயிற்சியின் போது, ரிஷப் பண்ட் செய்வது போலவே ஒரு 'ஃபிளிப்' செய்தார்.

ரிஷப் பண்ட், பேட்டிங் செய்யும்போது சதம் அடித்தால் முன்புறமாக பல்டி அடித்து அதை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கும் அதே ஸ்டைலை பின்பற்றியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

"அவர் பண்ட்டைப் போல் முயற்சிக்கிறார்"

இந்த நிகழ்வை பற்றி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மார்கன், குறிப்பிட்டு பேசினார். அவர் கூறுகையில், "ஓ... அங்கே பாருங்கள், ஹாரி ப்ரூக் ஒரு சிறிய ரிஷப் பண்ட் 'ஃபிளிப்' செய்ய முயற்சிக்கிறார். அவர் ரிஷப் பண்ட்டைப் போலவே தன்னை மாற்ற முயற்சிக்கிறார்" என்று கலகலப்பாக குறிப்பிட்டார்.

"நிறைய கிரிக்கெட் வீரர்கள் இப்படி பல்டி அடிப்பதை நாம் பார்த்ததில்லை. அதை செய்து முடித்த பின் அவர் தன்னைப் பற்றி பெருமையாக உணர்ந்தார். நிச்சயம் அவர் யாரிடமோ இதை என்னால் செய்ய முடியும் என சவால் விட்டு செய்து காட்டி இருக்கிறார். நிச்சயம் இது புதிய விஷயம் தான். ரிஷப் பண்ட் சதம் அடித்த பின் முன்புறமாக இப்படி செய்வார். ஹாரி ப்ரூக் அப்படி செய்யாமல் ஒருபுறமாக செய்துள்ளார். நிச்சயம் அவர் இதில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்" என்றார் இயான் மார்கன்.

ஒரு வீரரின் தனித்துவமான ஸ்டைலை மற்றொரு வீரர் பின்பற்றுவது புதிதல்ல என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி காட்டி வரும் ஹாரி ப்ரூக், அதே பாணியில் கலக்கும் ரிஷப் பண்ட்டின் ஸ்டைலை காப்பி அடித்திருப்பது, அவர் பண்ட்டின் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்பதையே காட்டுகிறது.

Story first published: Monday, August 11, 2025, 14:34 [IST]
Other articles published on Aug 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+