Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

145 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் சாதனை உடைப்பு.. இங்கிலாந்து வீரர் ஹாரி புருக் அசத்தல்.. டாப் கிளாஸ்

வெல்லிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புருக் 169 பந்துகளில் 184 ரன்கள் சேர்த்து அசத்தினார். 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது,

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஷ் பால் என்ற யுத்தியை கையாண்டு வரும் இங்கிலாந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது .

மெக்குல்லம் பயிற்சியாளராக வந்த பிறகு இங்கிலாந்து அணி அவரது வழிகாட்டுதலில் விளையாடிய 11 டெஸ்ட் போட்டியில் பத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

இந்த நிலையில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளத்தில் புற்கள் இருந்ததால், பந்துவீச்சுகு சாதகமாக மைதானம் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு தகுந்தாற்போல் இங்கிலாந்து அணி முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாக் கிராலி 2 ரன்களிலும் பென் டக்கட் 9 ரன்களிலும், ஒலி போப் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பதிலடி

பதிலடி

இதனால் இங்கிலாந்து அணி 21 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அப்போது ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் அந்த அணியின் இளம சூப்பர் ஸ்டார் ஹாரி புருக், அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஒரு புறம் பந்து, ஸ்விங் ஆனது நின்ற உடன், நியூசிலாந்து வீரர்களை வெளுத்து வாங்கினர்.

ஹாரி புருக் சதம்

ஹாரி புருக் சதம்

சிறப்பாக விளையாடிய ஜோ ரூட், தனது சர்வதேச 29வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஹாரி புருக், மைதானத்தின் நான்கு பக்கமும் பந்துவீச்சை சிதறடித்தார். இதனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் செய்வது அறியாமல் திகைத்து போய்விட்டனர். 169 பந்தில் 184 ரன்களை விளாசிய ஹாரி புருக் இன்று ஒரு மகத்தான சாதனையை செய்துள்ளார்.

புதிய சாதனை

புதிய சாதனை

அதன் படி, 9 டெஸ்ட் இன்னிங்சில் களமிறங்கி 800 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஹாரி புருக் படைத்துள்ளார். இதற்கு முன்பு வினோத் காம்பிளி 798 ரன்களும், ஹேர்பர்ட் 780 ரன்களும், சுனில் கவாஸ்கர் 778 ரன்களும், எவர்டன் 777 ரன்களும் அடித்திருந்தனர். இவர்களை எல்லாம் முந்தி ஹாரி புருக் தற்பாது வரை 807 ரன்கள் அடித்து இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ஹாரி புருக்கை ஐபிஎல் ஏலத்தில் ஐதராபாத் அணி 13 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கி இருக்கிறது.

Story first published: Friday, February 24, 2023, 21:29 [IST]
Other articles published on Feb 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+