டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றாக டெல்லி கேப்பிட்டல் இருக்கிறது. இந்த அணி பெரிய வீரர்களை வாங்கி அவர்கள் சரியாக செயல்படவில்லை, என்றால் உடனே அணியை விட்டு நீக்கிவிடுவார்கள்.அதன் பிறகு அவர்கள் பெரிய ஆளாக வந்து ஆச்சரியம் கொடுப்பார்கள்.
அப்படி ஒரு ராசி இந்த அணிக்கு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான வீரராக கருதப்படும் டிவில்லியர்சை டெல்லி அணி முதல்முறையாக வாங்கி அவர் சரியாக விளையாடவில்லை என அவரை அவசரப்பட்டு நீக்கியது.

அதன் பிறகு நடந்தது வரலாறு. இதைப் போன்று டேவிட் வார்னரையும் நீக்கிவிட்டு அவர் சன்ரைசஸ்க்கு சென்று ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்திருக்கிறார். அதன் பிறகு தற்போது மீண்டும் அவர் டெல்லி அணிக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் ரிக்கி பாண்டிங், கங்குலி போன்ற ஜாம்ப்வான்கள் டெல்லி அணியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்.
மேலும் காயத்திலிருந்து குணமடைந்த ரிசப் பண்ட், தற்போது அணிக்கு திரும்பி இருப்பது டெல்லி அணியின் பலத்தை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் ஒரு நல்ல செய்தி கிடைத்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு கெட்ட செய்தி கிடைத்திருக்கிறது. அதாவது இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஹாரி புரூக் வெறும் நான்கு கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி ஏலத்தில் வாங்கியது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என்று அறியப்படும், ஹாரி புருக், கடந்த சீசனில் கே கே ஆர் அணிக்கு எதிராக 55 பந்துகளில் சதம் அடித்தாலும் மற்ற போட்டிகளில் எல்லாம் கடுமையாக தடுமாறினார். இதனால் ஹைதராபாத் அணி அவரை அணியிலிருந்து நீக்கியது. இதனால், ஏலத்தில் ஹாரி புரூக் டெல்லி வாங்கி இருக்கிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சாதிக்காத ஹாரி புரூக், இம்முறை பட்டையை கிளப்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென்று தம்மால் இம்முறை ஐபில் போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறிவிட்டு அவர் விலகி விட்டார். ஏற்கனவே ஜேசன் ராய், இது போல் தான் ஐபிஎல் தொடரில் தேர்வாகி பின்னர் பாதியில் விலகினார்.
இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் தேர்வாகி பாதியில் விலகுவது அணி நிர்வாகிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் 21 வயதான ஜாக் பிரேசர் என்ற வீரரை தேர்வு செய்ய டெல்லி அணி முடிவு எடுத்திருக்கிறது. கடந்த மாதம் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் 29 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். மேலும் பிக் பேஸ் லீக் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 257 ரன்கள் ஜாக் பிரஷர் அடித்திருந்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரெட் 158 என்ற அளவில் இருந்தது.