சுப்மன் கில் சாதனையை முடித்துவிட்ட ஹாரி ப்ரூக்! 114 பந்தில் இரட்டை சதம் விளாசி சம்பவம்! பாவம் இலங்கை
ராவல்பிண்டி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சுப்மன் கில்லின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார். 114 பந்துகளில் இரட்டை சதம் விளாசிய ஹாரி ப்ரூக், இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 116 பந்துகளில் இரட்டை சதம் விளாசிய் புதிய வரலாறு படைத்தார். இதன் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 429 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய கேப்டன் ஹாரி ப்ரூக் 116 பந்துகளில் 10 சிக்ஸ், 21 உட்பட 202 ரன்களை விளாசி இருக்கிறார்.
75 பந்துகளில் சதத்தை விளாசிய ஹாரி ப்ரூக், அடுத்த 39 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாரி ப்ரூக் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும். அதேபோல் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக இங்கிலாந்து ஜாம்பவான் பென் ஸ்டோக்ஸ் 182 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து ஹாரி ப்ரூக் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளார். ஹாரி ப்ரூக்கை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அணியின் பவுலர்கள் என்ன செய்வது என்று மைதானத்திலேயே புலம்பினர்.
ஹாரி ப்ரூக்கின் ஆட்டம் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் வெயிலில் வைத்து இலங்கை பவுலர்களுக்கு தண்ணீர் காட்டியுள்ளார் என்று பாராட்டி வருகின்றனர். இதன் மூலமாக சுப்மன் கில் மற்றும் ஹாரி ப்ரூக் இடையில் புதிய போட்டி உருவாகிவிட்டதாகவும் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
