Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: முக்கிய அப்டேட்.. திடீர் மாற்றமா? மேட்ச் தொடங்கும் நேரம் அது கிடையாதாம் - ஹர்ஷா போக்ளே

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கும் நேரம் குறித்து நிலவில் குழப்பத்திற்கு பதில் கிடைத்திருக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இன்று (ஜூன்.18) எதிர்கொள்கிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு சவுத்தாம்ப்டனில் இப்போட்டி தொடங்கும் என்று செய்திகள் வெளியான நிலையில், அங்கு பெய்து வரும் தொடர் மழை ஆட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

 இடியுடன் மழை

இடியுடன் மழை

இந்நிலையில், இன்றைக்கு முதல் நாள் ஆட்டம், உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டது. 3 மணிக்கு டாஸ் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் போட்டி நடைபெறும் என்பதால், இரவு 10 மணியளவில் ஆட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 காலை 10:30 மணிக்கு

காலை 10:30 மணிக்கு

இந்த சூழலில், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது ட்விட்டரில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 தொடங்கவில்லை. 3 மணிக்கு தான் தொடங்குகிறது என்று ட்வீட் செய்துள்ளார். இதனால், உள்ளூர் நேரப்படி, காலை 10:30 மணிக்கு ஆட்டம் தொடங்குவதாக தெரிகிறது.

 தடைபடுமா?

தடைபடுமா?

அதுமட்டுமின்றி, இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இரவு முழுவதும் சவுத்தாம்ப்டன் நகரில் மழை கொட்டியது. காலையும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதல் நாள் ஆட்டம் முழுவதுமாகவோ அல்லது சில மணி நேரத்திற்கோ தடைபட வாய்ப்பிருக்கிறது.

 மேட்சுக்கு வாய்ப்பு

மேட்சுக்கு வாய்ப்பு

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ஹர்ஷா போக்ளே, "இன்றைய ஆட்டத்தின் சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டால், மாலை கூடுதல் நேரம் வழங்கப்படலாம் அல்லது நாளை காலை விரைவாகவே ஆட்டம் தொடங்கப்படலாம் என்று கூறியுள்ளார். ஐசிசி இந்த விதியை ஏற்கனவே அறிவித்துவிட்டாலும், இவரது ட்வீட் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் அறிகுறி, அட்லீஸ்ட் சில மணி நேரங்களுக்கு பிறகாவது மேட்ச் நடக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் தான்.

Story first published: Friday, June 18, 2021, 19:58 [IST]
Other articles published on Jun 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+