Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2017: மீண்டும் வருகிறார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே!

மும்பை: பிரபல கிரிக்கெட் வர்ணையாளர் ஹர்ஷா போக்லே ஒரு வருடம் கழித்து மீண்டும் இந்த ஐபிஎல் சீசனின் வர்ணனை செய்ய உள்ளார்.

ஹர்ஷா போக்லே இந்த பெயரை கிரிக்கெட் தெரிஞ்ச 90 சதவீத பேருக்கு தெரியும். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் வர்ணனையில் இருக்கும் இவரை கடந்த 9-வது ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வர்ணையாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது பிசிசிஐ.

Harsha Bhogle returns as commentator in IPL

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியின் போது விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மூத்த அதிகாரி ஒருவருக்கும் இவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அமிதாப் பச்சன் தன் டிவிட்டர் பக்கத்தில், 'இந்திய வர்ணனையாளர் வேறு விஷயங்களைப் பேசுவதைத் தவிர்த்து, தங்கள் வீரர்களைப் பற்றிப் பேசினால் நல்லது' என்று பதிவிட்டார்.

அப்போதைய கேப்டன் டோணி, அமிதாப்பின் பதிவைப் பகிர்ந்தார். இதையடுத்து, ஹர்ஷா போக்லேவை வர்ணனையாளர்கள் பிரிவிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் தாம் வர்ணனை செய்யவிருப்பதாக ஹர்ஷா போக்லே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் பிசிசிஐ வெளியிட்டுள்ள 20 பேர் கொண்ட வர்ணனையாளர்களின் பட்டியலில் ஹர்ஷா போக்லே பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும் சோனி நிறுவனத்தின் மூலம் இந்தி வர்ணனை மட்டும் செய்வார் என கூறப்படுகிறது.

Story first published: Thursday, April 6, 2017, 5:04 [IST]
Other articles published on Apr 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+