
துபாயில் இன்று நடைபெறுகிறது
ஐபிஎல் 2020 சீசனின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய 5வது ஐபிஎல் கோப்பைக்காகவும் டெல்லி அணி முதல் கோப்பைக்காகவும் தீவிரம் காட்டி வருகின்றன.

பல்வேறு மாற்றங்கள்
கடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதி தோல்வியடைந்தது டெல்லி கேபிடல்ஸ். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் மோதிய 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

டெல்லி அணி வெற்றி பெறலாம்
இந்நிலையில் கடந்த 2வது தகுதிச்சுற்று போட்டியில் மேற்கொண்ட அதே சுதந்திரம் மற்றும் தீவிரத்துடன் இன்றைய இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி செயல்பட்டால் வெற்றி வசப்படும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

வெற்றி வாய்ப்பு
துவக்க வீரராக மார்கஸ் ஸ்டோய்னிசை களமிறக்கியது மற்றும் ஷிம்ரன் ஹெட்மயரை மீண்டும் அணியில் இணைக்கும் முடிவு ஆகியவை அணிக்கு சிறப்பான வெற்றி வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் போக்ளே கூறியுள்ளார். கடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான சில முடிவுகள் அணியில் சிறப்பான மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பும்ராவை நம்பி மும்பை அணி
இதேபோல மும்பை அணி தன்னுடைய வீரர்களுக்கு சிறப்பான சுதந்திரத்தை அளித்துள்ளது. அணியின் குவின்டன் டீ காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக உள்ளனர். அணியின் டிரெண்ட் போல்ட் பிட்னஸ் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பௌலிங்கில் பும்ராவை நம்பி மும்பை அணி உள்ளதாகவும் போக்ளே கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











