For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையை காலி செய்த ஹர்ஷல் படேல்.. குறைந்த பந்துகளில் 150 விக்கெட்

லக்னோ: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் மாபெரும் ஐபிஎல் சாதனையைப் படைத்திருக்கிறார். லசித் மலிங்காவின் பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை முறியடித்துள்ளார்.

ஹர்ஷல் படேல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். எய்டன் மார்க்ரம் விக்கெட்டை அவர் வீழ்த்திய போது, ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார். இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார்.

Harshal Patel Breaks Lasith Malinga s IPL Record for Fastest 150 Wickets in Terms of Balls Bowled

இதற்கு முன் ஐபிஎல் தொடரில் லசித் மலிங்கா 2444 பந்துகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அதுவே இதுவரை ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் என்ற சாதனையாக இருந்தது. லசித் மலிங்கா ஐபிஎல் தொடரின் ஜாம்பவானாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவரது சாதனையை ஹர்ஷல் படேல் தற்போது முறியடித்துள்ளார்.

எய்டன் மார்க்ரம் விக்கெட்டை ஹர்ஷல் படேல் வீழ்த்திய போது, அவர் 2381 பந்துகளை மட்டுமே ஐபிஎல்-ல் வீசியிருந்தார். மலிங்காவை விட 63 பந்துகள் குறைவாக வீசி ஹர்ஷல் படேல் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் யுஸ்வேந்திர சாஹல் இடம் பெற்று இருக்கிறார். அவர் 2543 பந்துகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நான்காவது இடத்தில் டுவைன் பிராவோ 2656 பந்துகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இடம் பெற்று இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் பும்ரா இடம் பெற்று இருக்கிறார். அவர் 2832 பந்துகளில் இந்தச் சாதனையை செய்திருந்தார்.

ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் முதல் 150 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல் -

  • ஹர்ஷல் படேல் - 2381 பந்துகள்

  • மலிங்கா - 2444 பந்துகள்

  • யுஸ்வேந்திர சாஹல் - 2543 பந்துகள்

  • டுவைன் பிராவோ - 2656 பந்துகள்

  • பும்ரா - 2832 பந்துகள்

ஹர்ஷல் பட்டேல் இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக் கொடுத்தது ஏமாற்றம் அளித்தது. இந்த ஆண்டு அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 9.59 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார். ஹர்ஷல் பட்டேல் விக்கெட்கள் வீழ்த்தினாலும் ரன்களை வாரி இறைப்பது அவருக்கு பின்னடைவாக அமைந்து இருக்கிறது.

Story first published: Tuesday, May 20, 2025, 8:58 [IST]
Other articles published on May 20, 2025
English summary
Harshal Patel Breaks Lasith Malinga's IPL Record for Fastest 150 Wickets in Terms of Balls Bowled
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+