ஹர்சல் பட்டேல் Vs ஆர்ஸ்தீப் சிங்.. டி20 உலகக்கோப்பையில் யாருக்கு இடம்.. IND vs SA தொடரில் முடிவு
திருவனந்தபுரம் : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரில், இரண்டு இந்திய வீரர்களின் தலைவிதியை நிர்ணயிக்க போக உள்ளது.
Recommended Video
டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ள இந்திய அணியில் கிட்டத்தட்ட பேட்ஸ்மேன்களின் இடம் உறுதியாகிவிட்டது.
தற்போது பந்துவீச்சில் தான் குழப்பம் நீடிக்கிறது. இதில் சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார்.

3வது வேகப்பந்துவீச்சாளர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சாஹலும், இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக தனது இடத்தை பூர்த்தி செய்துவிட்டார். இந்த நிலையில், 3 வேகப்பந்துவிச்சாளர்களில் ஒரு இடம் பும்ராவுக்கு சென்றுவிடும். சீனியாரிட்டி அடிப்படையில் 2வது வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாராக இருக்க அதிக வாய்ப்புண்டு. இதனால் 3 வது வேகப்பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.

அருமையான வாய்ப்பு
இதில் ஹர்சல் பட்டேலுக்கும், ஆர்ஸ்தீப் சிங்கிற்கும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் தான் தென்னாப்பிரிக்கா தொடர் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமாரும், ஹர்திக் பாண்டியாவும் இல்லை. இதனால், இரண்டு பேரையும் பிளேயிங் லெவனில் வைத்து விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒரு இடம் 2 வீரர்கள்
இதில் யார் சிறப்பாக விளையாடுவார்களோ, அவர் தான் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார்கள். காயத்திலிருந்து திரும்பி வந்துள்ள ஹர்சல் பட்டேல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டி20 போட்டியில் ரன்களை வாரி வழங்கினாலும், கடைசி டி20 போட்டியில் தனது பழைய ஃபார்ம்க்கு திரும்பும் வகையில் பந்துகளை வீசினார்.

ஆர்ஸ்தீப் சிங் Vs ஹர்சல் பட்டேல்
அதே சமயம், ஆர்ஸ்தீப் சிங் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகிறார். ஆட்டத்தின் கடைசி 3 ஓவர்கள் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவது தான் அணியின் குறையாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆர்ஸ்தீப் சிங் , பும்ராவும் கடைசியில் பந்துவீசினால், அந்த குறை சரி செய்யப்படும். ஹர்சல் பட்டேல் இந்த கட்டத்தில் ஒரு ரன்களுக்கு 11 ரன்கள் மேல் தருகிறார். ஆனால் ஆர்ஸ்தீப் சிங் 7 ரன்களுக்கு குறைவாகவே தருகிறார்.


Click it and Unblock the Notifications