Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலத்தில் இத்தனை பணம்? என் வாழ்க்கை ஒரே இரவில் மாறியது- ஹர்சல் பட்டேல் உருக்கம்

பெங்களூரு: மெகா ஏலத்தின் போது ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்படுவேன் என்று சிந்திக்கவே இல்லை என்று ஆர்சிபி வீரர் ஹர்சல் படேல் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ளது. ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை அனைத்து அணிகளும் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஒவ்வொரு அணிகளும் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆர்சிபி அணி வீரர்களின் முக்கியமான தருணங்களை பாட்கேஸ்ட்டாக வெளியிட்டு வருகிறது.

ஹர்சல் படேல் பேச்சு

ஹர்சல் படேல் பேச்சு

அதன் ஒரு பகுதியாக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஹர்சல் படேல், மெகா ஏலத்தின் போது ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது பற்றிய நிகழ்வை பேசியுள்ளார். அதில், 2021ம் ஆண்டில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தேன். அதனால் மெகா ஏலத்தின் போது ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை ஏலத்தில் வாங்கப்படுவேன் என்று எதிர்பார்த்திருந்தேன்.

மெகா ஏலம் எதிர்பார்ப்பு

மெகா ஏலம் எதிர்பார்ப்பு

பலரும் என்னிடம் ஏலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கேட்டார்கள். அவர்களிடமும் அதே பதிலை தான் கூறினேன். ஏனென்றால் என்னை போன்ற வீரர்களுக்கு கடந்த சில ஏலங்களில் அந்த தொகை தான் அணிகளால் வழங்கப்பட்டிருந்தது. அதனால் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளாமல் சிறிய எதிர்பார்ப்போடு தான் இருந்தேன். ஆனால் என்னை சுற்றி இருந்த நண்பர்கள் இரட்டை இலக்க தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவேன் என்று கூறினார்கள்.

ஆர்சிபி அணிக்காக ஆட வேண்டும்

ஆர்சிபி அணிக்காக ஆட வேண்டும்

ஆனால் அவர்கள் நான் நம்பவில்லை. ஆனால் ஏலத்தின் போது ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் எனக்காக வேகமாக போட்டிபோட்டார்கள். ஒரு கட்டத்தில் ரூ.10.75 கோடியை ஏலத்தொகை எட்டும்போது, வேறு யாரும் ஏலம் கேட்க கூடாது என்று வேண்டினேன். ஏனென்றால் எனக்கு ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்பதே ஆசை.

சுதந்திரம்

சுதந்திரம்

அந்தப் பணம் என் வாழ்க்கைக்கு அதிக அளவில் பயன்பட்டது. பணம் தான் நமது வாழ்க்கைக்கு சுதந்திரத்தையும், சில வாய்ப்புகளையும் கொடுக்கும். இதற்கு பின் நான் இதே தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவேனா என்பது தெரியாது. அதேபோல் என் வாழ்க்கைக்கு அவ்வளவு பணம் தேவையும் இல்லை. ஆனால் வாழ்க்கையின் சுதந்திரத்திற்கு பணம் தான் முக்கியமான கருவி. அப்படிதான் நான் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, March 11, 2023, 21:57 [IST]
Other articles published on Mar 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+