Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்த்தாலே தெரியுது ஃபயரு.. எதிரணியே நீ பதறு.. வந்துவிட்டார் 'குங்ஃபு பாண்டியா'!

டெல்லி: இந்திய அணியில் தற்போது முக்கியமான வீரராக உருவெடுத்து இருப்பவர் ஹர்திக் பாண்டியா. பல நாட்களாக இந்திய அணி தேடி வந்த ஆல்ரவுண்டர் இவர்தான் என்று பலரும் பாண்டியாவை குறிப்பிட்டு வருகின்றனர்.

களத்தில் இறங்கியதும் சிக்ஸ் அடிப்பது, பவுலிங்கில் பவுன்ஸ் போட்டு பேட்ஸ் மேன்களை கலங்கடிப்பது, மாஸ் பீல்டிங் என அனைத்திலும் தற்போது சிறந்து விளங்கி வருகிறார் பாண்டியா. கிரிக்கெட்டில் மட்டும் இல்லை புதுப் புது ஹேர்ஸ்டைல் வைப்பதிலும் நான் ஆல்ரவுண்டர் தான் என நிரூபித்து இருக்கிறார் இவர்.

இவர் தற்போது வைத்திருக்கும் புதிய ஹேர்ஸ்டைல் இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது. மேலும் அந்த புது ஹேர்ஸ்டைல் காரணமாக அவருக்கு குங்ஃபூ பாண்டியா என்று பெயரும் கிடைத்து இருக்கிறது.

 ஆல்ரவுண்டர் பாண்டியா

ஆல்ரவுண்டர் பாண்டியா

இந்திய அணியில் முகமது கைப் ஒருகாலத்தில் மிக முக்கியமான ஆல் ரவுண்டராக இருந்தார். அவருக்கு பின் அந்த இடம் காலியாகும் என்று நினைத்த போது யுவராஜ் சிங் சரியாக வந்து அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். ஆனால் யுவராஜுக்கு பின் அந்த ஆல் ரவுண்டர் இடம் காலியாகவே இருந்தது. சில நாட்கள் ஜடேஜா அந்த இடத்தை தற்காலிகமாக பிடித்திருந்தார். தற்போது இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் புதிய பெஸ்ட் ஆல் ரவுண்டர் தான் ஹர்திக் பாண்டியா.

பாண்டியாவின் பழைய ஹேர் ஸ்டைல்

முதல் முதலில் கிரிக்கெட் களத்தில் பாண்டியா நுழைந்தது 2016ல் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டில் தான். அப்போது அவர் இந்திய அணியில் இப்படி ஒரு முக்கியமான இடத்தை பிடிப்பார் என்று யாருக்கும் தெரியாது. அப்போது மிகவும் சாதாரணமான , வங்கியில் வேலை செய்யும் 30 வயதுக்காரர் தோற்றத்தில் தான் இருந்தார் பாண்டியா. அதிலும் கூட தலை முடியை வகிடெடுத்து சீவி சாதாரண தோற்றத்தில் காணப்பட்டார்.

ஹேர்ஸ்டைலை மாற்றினார்

அதன்பின் இந்த வருட ஜூலையில் நடத்த இலங்கைக்கு எதிரான போட்டியில் வித்தியாசமான தோற்றத்துடன் களம் இறங்கினார் பாண்டியா. ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்த பாண்டியா தலையில் முக்கால் வாசி பகுதியில் முடியை வெட்டி இருந்தார். ஒருபக்கம் மட்டும் வித்தியாசமாக முடி தொங்கிக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து தொடருக்காக அதையும் வித்தியாசமாக மாற்றி இருக்கிறார் இவர். அதன்படி அந்த சிறிய அளவிலான முடியில் வெள்ளை நிறத்தில் கலர் செய்து இருக்கிறார்.

 குங்ஃபூ பாண்டியாவாக மாறினார்

குங்ஃபூ பாண்டியாவாக மாறினார்

இதையடுத்து அவரின் அந்த புதிய ஹேர்ஸ்டைல் டிரெண்ட் ஆகியிருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் இவருக்கு குங்ஃபூ பாண்டியா என்ற செல்லப் பெயரையும் வைத்துள்ளனர். குங்ஃபூ பாண்டா படத்தில் வரும் பாண்டா கரடிகளுக்கு தலையில் இருக்கும் வெள்ளை முடியை போல இவருக்கு இருப்பதால் அப்படி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, October 26, 2017, 12:52 [IST]
Other articles published on Oct 26, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+