Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு எதிராக மாஸ் காட்டும் தமிழக வீரர் விஜய்சங்கர்… உலக கோப்பையில் வாய்ப்பு கிட்டுமா?

மும்பை: உலக கோப்பைக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் இடத்திற்கு, தமிழக வீரர் விஜய்சங்கரை தேர்வு செய்வதா, வேண்டாமா என இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக யோசித்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் விஜய்சங்கர், தான் ஆல்ரவுண்டர் என்பதை தொடர்ந்து நிரூபித்துள்ளார். இருப்பினும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாவதில் சிக்கல் நீடிக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் ஒருநாள் போட்டியில் அவரது ஆட்டம் பெயர் சொல்லும்படியும், பாராட்டத்தக்க வகையிலும் இருந்தது . நாக்பூர் போட்டியில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் விஜய்சங்கர் ஒரு சிக்ஸருடன் 46 ரன்கள் (41 பந்துகளில்) எடுத்ததுடன், 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

வெற்றிக்கு உறுதுணை

வெற்றிக்கு உறுதுணை

இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய உறுதுணையாக திகழ்ந்தார். ராஞ்சி 3வது ஒருநாள் போட்டியிலும் அவர் இடம்பிடித்துள்ளார். இதேபோல், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டு வருகிறார்.

அவுட்டாகும் சங்கர்

அவுட்டாகும் சங்கர்

ஆனாலும், தமது இடத்தை உறுதிப்படுத்த அதிர்ஷ்டம் ஏனோ, அவருக்கு கை கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும், தமக்கு வாய்க்கும் பேட்டிங் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரைசதம் நெருங்கும் சூழலில் துரதிருஷ்டவிதமாக அவுட் ஆகி விடுகிறார்.

தீவிர ஆலோசனை

தீவிர ஆலோசனை

அதன்காரணமாக, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் இடத்திற்கு, தமிழக வீரர் விஜய்சங்கரை தேர்வுசெய்வதா என்று பிசிசிஐ தீவிர யோசனையில் உள்ளது. அவரை தேர்வு செய்யலாமா அல்லது ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்வதா என்பதில் இழுபறி நீடித்துவருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாய்ப்பு தரப்படுமா?

வாய்ப்பு தரப்படுமா?

ஆனால்... தற்போதை ஆஸ்திரேலிய தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் உற்று கவனித்து வருகிறது. அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களை உலக கோப்பை தொடரில் வைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ யோசித்து வருகிறது. அந்த வகையில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

Story first published: Friday, March 8, 2019, 14:59 [IST]
Other articles published on Mar 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+