Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொறுமையில் முனிவன்.. பேட்டிங்கில் மாவீரன்.. கோலிக்கு போட்டியாக ரன் குவித்த வீரர் ஓய்வு!

Recommended Video

Hashim Amla Retires : ஹஷிம் ஆம்லா ஓய்வு : கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து- வீடியோ

கேப் டவுன் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார்.

சுமார் 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சி வந்த ஹஷிம் ஆம்லா பேட்ஸ்மேனாக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். அவரது ஓய்வு அறிவிப்பை அடுத்து அவருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.

ரன் மழை பொழிந்தார்

ரன் மழை பொழிந்தார்

கடந்த 10 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் ஏபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் உள்ளிட்ட சிறந்த வீரர்களுடன் இணைந்து கை கொடுத்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் அரங்கில் ரன் மழை பொழிந்த ஆம்லா, விரைவாக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

கோலிக்கு போட்டி

கோலிக்கு போட்டி

விராட் கோலிக்கு போட்டியாக அதே வேகத்தில் ரன் குவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 349 சர்வதேச போட்டிகளில் 18,000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து தள்ளி இருக்கிறார். 55 சதங்கள் அடித்துள்ளார். அவருக்கு குவிந்த வாழ்த்துக்களில் சில இங்கே -

மந்திரக் கோல் பேட்ஸ்மேன்

ஹஷிம் ஆம்லா தன் மந்திரக் கோலுடன் பேட்டிங் செய்வதை பார்க்கவே அற்புதமாக இருக்கும் என கூறி இருக்கிறார் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் எம்பாங்க்வா.

அப்போ பார்த்தது

அருமையான சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு வாழ்த்துக்கள் ஹஷிம் ஆம்லா.. 90களின் இறுதியில் கிங்க்ஸ்மெட் வலையில் உங்களை முதல் முறை பார்த்ததில் இருந்து இது என்ன அற்புதமான பயணம்! என குறிப்பிட்டுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஷான் பொல்லாக்.

விவரிக்க வார்த்தைகள் இல்லை

அணிக்கும், எனக்கும், இந்த நாட்டுக்கும், எல்லாவற்றுக்கும் நீங்கள் கொடுத்தவற்றை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எப்போதும் அறிவுரை பெற இவரை அணுகலாம் என பாராட்டி உள்ளார் சக தென்னாப்பிரிக்க வீரர் ஷம்ஸி.

இர்பான் பதான் நினைவுகள்

முதன் முறையாக ஹஷிம் ஆம்லாவுக்கு எதிராக நியூசிலாந்தில் நடந்த அண்டர் 19 உலகக்கோப்பையில் ஆடினோம். அப்போதே எங்களுக்கு எதிராக சிறந்த இன்னிங்க்ஸ் ஆடி தன் அருமையான ஆட்டத்தின் ஒரு துளியை காட்டினார் என்று நினைவு கூர்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான்.

பொறுமையில் முனிவர்

நீங்கள் எப்படிப்பட்ட கிரிக்கெட் பயணத்தை கொண்டுள்ளீர்கள் சாம்பியன்.. முனிவர் போல பொறுமை, மாவீரன் போல பேட்டிங். சிறப்பு என பாராட்டி இருக்கிறார் ஆர்பி சிங்.

Story first published: Friday, August 9, 2019, 10:10 [IST]
Other articles published on Aug 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+