
அடுக்கடுக்கான புகார்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மிக மோசமான காலக்கட்டம் என்றால் நிச்சயம் அது 2018ம் ஆண்டு தான். மோசமானது மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானதும் கூட!. கள்ளத் தொடர்பு, மேட்ச் பிக்ஸிங், கொலை முயற்சி, வேறு திருமணம் செய்ய முயற்சி, தேசத் துரோகம் என ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் வரிசையாக புகார்களை அடுக்கினார்.

புகார் பட்டியல்
ஆரம்பத்தில் அனைவரும் குழம்பி நிற்க(போலீஸ் உட்பட), ஹசின் ஜகான் சில வாட்ஸ் அப் ஆதாரங்களையும் வெளியிட, முகமது ஷமி மீது 498 A, 323, 307, 376, 506, 328, 34 ஆகிய பிரிவுகளில் கொல்கத்தாவில் வழக்குப் பதிவு செய்தது. அதேசமயம், தன் மீதான அனைத்துப் புகார்களையும் ஷமி மறுத்து வந்தார். ஷமி மீது அவரது மனைவி 'வெளியிட்ட' புகார் பட்டியலுக்கு பிறகு, பிசிசிஐ 'வெளியிட்ட' வீரர்களின் ஆண்டு வருமான ஒப்பந்த பட்டியலில், இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான முகமது ஷமியின் பெயர் தவிர்க்கப்பட்டது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மெல்ல மெல்ல
அவர் மீதான புகாரை விசாரிக்க, பிசிசிஐ தனது ஊழல் தடுப்புப் பிரிவை முடுக்கிவிட்டது. எனினும், விசாரணையின் முடிவில் அவர் மீதான புகாரில் எந்த குற்றமும் இல்லை என்று விசாரணை குழு அறிக்கை சமர்ப்பிக்க நிம்மதி பெருமூச்சு விட்டார் ஷமி. பிசிசிஐ-யும் கூட. ஏனெனில், அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷமியை இழக்க நிர்வாகம் விரும்பவில்லை. பிறகு, மெல்ல மெல்ல குற்றங்கள் அனைத்தும் அவரது மனைவி மீது திரும்பியது.

தனி ரசிகர் கூட்டம்
குடும்பத்துடன் சென்று ஷமியின் வீட்டில் தகராறு செய்ததற்காக அவரை போலீசார் கைது செய்தனர். பிறகு, ஒருக்கட்டத்தில் இருவரும் முற்றிலுமாக பிரிந்தனர். ஷமி தனது கிரிக்கெட் கரியரில் கவனம் செலுத்த, மனைவி ஹசின் தனக்கு பிடித்த மாடலிங்கில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஹசினின் பதிவேற்றும் புகைப்படங்களை பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் தான் ஷமி மனைவி ஹசின், ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட தற்போது அது மீண்டும் சர்ச்சையாகியுளளது. உண்மையில் அதில் ஆபாசம் என்று பெரிதாக எதுவும் இல்லை. ஆனால், இஸ்லாமிய அமைப்பினர் சிலர், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகும், இன்னமும் இருவரும் டைவர்ஸ் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், ஷமிக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அவர் தற்போது இங்கிலாந்து தொடரில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











