Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் சாதனைகள்… சேட்டன் சர்மா முதல் முகமது ஷமி வரை...! ஓர் அலசல்

லண்டன்: நடப்பு உலக கோப்பை தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தி சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த 11 உலக கோப்பை தொடர்களில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1975 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர், இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

உலக கோப்பை தொடர்களில் 9 முறை ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது. 1975, 1979, 1983 ஆகிய ஆண்டுகளில் மட்டும் ஹாட்ரிக் விக்கெட் எதுவும் வீழ்த்தப்படவில்லை. 1987ம் ஆண்டில், நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்தியாவின் மித வேகப் பந்துவீச்சாளர் சேட்டன் சர்மா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

முதல் ஹாட்ரிக்

முதல் ஹாட்ரிக்

அதன் மூலம், உலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து, 1992, 1996ம் ஆண்டு தொடர்களில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தப் பட வில்லை.

பாக். பவுலர்

பாக். பவுலர்

1999ம் உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 2003ம் ஆண்டு தொடரின் லீக் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இலங்கை வேகப் பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை சாய்த்து, ஹாட்ரிக் பட்டியலில் இணைந்தார்.

சூப்பர் 8 சுற்றில் ஹாட்ரிக்

சூப்பர் 8 சுற்றில் ஹாட்ரிக்

அதே தொடரில், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, கென்யாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 2007ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில், இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மலிங்கா, தொடர்ந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹாட்ரிக் விக்கெட் சாதனையில் இணைந்தார்.

2011ம் ஆண்டு சாதனை

2011ம் ஆண்டு சாதனை

2011ம் ஆண்டு தொடரில், நெதர்லாந்துக்கு எதிராக மேற்கிந்திய தீவுகளின் கீமர் ரோச் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். அந்த தொடரின் மற்றொரு போட்டியில் கென்யாவுக்கு எதிராக இலங்கையின் மலிங்கா, ஹாட்ரிக் படைத்தார். 2015 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் பின்ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

முதல் இந்தியர்

முதல் இந்தியர்

அதே தொடரில், தென் ஆப்ரிக்காவின் டுமினி, இலங்கையுடன் மோதிய காலிறுதியில், ஹாட்ரிக் விக்கெட் சாய்த்தார். முதல் முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சேட்டன் சர்மா இந்தியர் ஆவார். 2 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே வீர்ர் என்ற பெருமைக்கு மலிங்கா சொந்தக்காரராக உள்ளார். ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர்களில் சக்லைன் முஷ்டாக், டுமினி மட்டுமே சுழற் பந்து வீச்சாளர்கள்.

7 போட்டிகளில் வெற்றி

7 போட்டிகளில் வெற்றி

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர்களில் சமிந்தா வாசை தவிர எஞ்சிய வீரர்கள் அனைவரும் வலதுகை பந்துவீச்சாளர்கள். ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்பட்ட 9 போட்டிகளில் சம்மந்தப்பட்ட வீரர்களின் அணிகள் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இங்கிலாந்து தோல்வி

இங்கிலாந்து தோல்வி

2007ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மலிங்கா ஹாட்ரிக் வீழ்த்திய போதும் இலங்கை தோல்வியுற்றது, இன்றளவும் பேசப்படுகிறது. 2015ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டீவன் பின், ஹாட்ரிக் எடுதத போதும், இங்கிலாந்து தோல்வியடைந்தது.

8 லீக் போட்டிகள்

8 லீக் போட்டிகள்

உலக கோப்பையில் டுமினி மட்டுமே நாக் அவுட் போட்டியான காலிறுதியில் ஹாட்ரிக் விக்கெட் சாய்த்துள்ளார். மற்ற வீரர்கள் அனைவருமே 8 முறை லீக் ஆட்டங்களிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், ஒருமுறை கூட ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தப்பட்டதில்லை.

Story first published: Sunday, June 23, 2019, 16:57 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+