For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரபரப்பாகும் டிஎன்பிஎல்.... திண்டுக்கல்லுக்கு ஹாட்ரிக் வெற்றி.... காஞ்சியை வீழ்த்தியது!

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் காஞ்சி அணியை வீழ்த்தியது திண்டுக்கல் அணி. இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது.

திண்டுக்கல்:டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. நேற்று நடந்த ஆட்டத்தி்ல விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

காஞ்சி Vs திண்டுக்கல் Match

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வென்றது. தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்றது திண்டுக்கல் அணி.

Hat trick win for Dindugul dragons in the tnpl.

முதலில் பேட்டிங் செய்த காஞ்சி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. முதல் நிலை ஆட்டக்காரர்களான விஷால் வைத்தா ரன் எடுக்காமலும், லோகேஸ்வர் 18 ரன்கள், கேப்டன் பாபா அபராஜித் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்

இந்த நிலையில் களமிறங்கிய மோஹித் ஹரிஹரன் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிரான்சிஸ் ரோகின்ஸ் 41 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து விளையாடிய திண்டுக்கல் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் ஹரி நிஷாந்த் 50 ரன்களும், என். ஜெகதீசன் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். என்.எஸ். சதுர்வேதி ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார்.

புள்ளி பட்டியல்

இதன் மூலம் தான் விளையாடிய 4 ஆட்டங்களில் தொடர்ந்து 3வது ஆட்டத்தில் திண்டுக்கல் வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Tuesday, July 24, 2018, 15:06 [IST]
Other articles published on Jul 24, 2018
English summary
Dindigul dragons registered hat trick win in the tnpl.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+