Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் எதிரணிகளை வீழ்த்தும் சூப்பர் ப்ளான்..! வியூகத்தை லீக் செய்த இந்திய இளம் பவுலர்

மும்பை:உலக கோப்பை தொடரில், எதிரணிகளை வீழ்த்த வியூகங்களை வகுத்திருப்பதாக இந்திய இளம் வீரர் சாஹல் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் சாஹல். இளம் வீரரான அவர், பிரபல ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்திருந்தார் அப்போது அவர் கூறியதாவது: அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: உலக கோப்பை போட்டி என்றால் நெருக்கடி இருக்கத்தான் செய்யும்.

அதனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எனக்கும், குல்தீப் யாதவுக்கும் இடையிலான நம்பிக்கை பெரிய விஷயமாகும். இருவரும் கூட்டாக கலந்து ஆலோசித்து செயல்பட்டு வருகிறோம். கோலி, தோனி மற்றும் சீனியர் வீரர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

நன்கு தெரியும்

நன்கு தெரியும்

உலக கோப்பை போட்டியிலும் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு செயல்படுவோம். நான் இங்கிலாந்தில் கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அதனால் அங்குள்ள சூழ்நிலை எனக்கு நன்றாகவே தெரியும்.

ஆடுகளத்தின் தன்மை

ஆடுகளத்தின் தன்மை

கடந்த முறை நான் இங்கிலாந்தில் விளையாடுகையில் அங்குள்ள சூழ்நிலை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. எனவே, இந்தமுறை நிச்சயம் சிறப்பாக செயல் படுவோம். இங்கிலாந்து ஆடுகளத்தின் தன்மை கடினமானது. உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக பங்கேற்க இருப்பதால், தொடரை ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கிறேன்.

சிறப்பான திட்டங்கள்

சிறப்பான திட்டங்கள்

உலக கோப்பையில் இருக்கும் நெருக்கடியை சந்தித்து எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். சுழற்பந்து வீச்சாளர்கள் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். நமது பந்துவீச்சு சிறப்பாக அமையா விட்டாலும் பயமின்றி செயல்பட வேண்டியது முக்கியம். அப்படி செயல்படா விட்டால் நமது திட்டங்கள் அனைத்தும் தவறாக அமைந்துவிடும்.

அதிக வாய்ப்பு

அதிக வாய்ப்பு

உலக கோப்பை போட்டிக்கான நமது அணி வலுவானதாகும். இங்கிலாந்தும் வலுவானதாகும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் கடுமையான சவால்களை தரும். எது எப்படி இருந்தாலும், இந்திய அணிதான் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

Story first published: Saturday, May 18, 2019, 12:49 [IST]
Other articles published on May 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+