Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அக்சர், சூர்யகுமார் தேர்வு சரியா? ஆஸி. ஸ்பின்னர்களை வெளுக்க ரோகித் போட்ட திட்டம்.. என்ன அது?

நாக்பூர்: பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தேர்வு சரியா என்பது குறித்து பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் பார்டர் - கவாஸ்கர் டிராபி. கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற இளம் இந்தியா அணி, வலிமையான ஆஸி.யை சொந்த மண்ணிலேயே வீழ்த்தி கோப்பையை வென்று வந்தது.

இதற்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்துள்ளது. ஆனால் 2012ம் ஆண்டிற்கு பின் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி ஒருமுறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. மொத்தமாகவே இரு முறை மட்டுமே டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இந்திய வீரர்களின் காயம்

இந்திய வீரர்களின் காயம்

இதனால் மீண்டும் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் பும்ரா ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை சந்தித்துள்ளது. பும்ராவின் இடத்தில் விளையாட சிராஜ் இருந்தாலும், ரிஷப் பண்ட் இடத்தில் விளையாடுவதற்கு தான் இந்திய அணி குழப்பத்தில் உள்ளது.

கேஎஸ் பரத்

கேஎஸ் பரத்

கேஎஸ் பரத் நீண்ட காலமாக இந்திய அணியில் பயணித்து வந்தாலும், அவர் ரிஷப் பண்ட் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது கேள்வியாக உள்ளது. இதனிடையே இந்திய மைதானத்தில் மூன்று ஸ்பின்னர்களில் 3வது ஸ்பின்னராக குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் ஆகியோரில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

ஏன் அக்சர் படேல் தேர்வு?

ஏன் அக்சர் படேல் தேர்வு?

அதில் இந்திய நிர்வாகம் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் அக்சர் படேலை களமிறக்கியுள்ளது. அண்மைக் காலமாக பந்துவீச்சில் எதிரணிகளை திணறடித்து வரும் குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்றே கருதப்பட்டது. ஆனால் கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் மீண்டும் இந்திய அணி அக்சரிடம் போயுள்ளது. இது சரியாக இருக்குமா என்பதை களத்தில் மட்டுமே அறிய முடியும்.

ரிஷப் பண்ட் அணுகுமுறை

ரிஷப் பண்ட் அணுகுமுறை

அதுமட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவும் அறிமுகமாகியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ச்சியளிக்க வேண்டும் என்பதோடு, ஆஸி. ஸ்பின்னர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்க வேண்டும் என்பதால் அதிரடியாக ஆடும் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரிஷப் பண்ட் அணுகுமுறையையே சூர்யகுமார் யாதவ் பின்பற்றுவார் என்று பார்க்கப்படுகிறது.

சொதப்பல்

சொதப்பல்

என்னதான் டி20 மற்று ஒருநாள் போட்டிகளில் ஸ்பின்னர்களை சூர்யகுமார் யாதவ் வெளுத்து வாங்கினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி செயல்பட போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அக்சர் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இந்திய அணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. ஆனால் இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய அணி தோல்வியடையவும் வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Thursday, February 9, 2023, 10:08 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+