Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேசாம என் மீது பொது நலன் வழக்கு போடுங்களேன்... டோணி ஆலோசனை!

மெல்போர்ன்: ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணி தோல்வியுறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் டோணி, இதுகுறித்து தன் மீது பொது நலன் வழக்குப் போட்டு விவாதிக்கலாம் என்று கிண்டலாக கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, அங்கு தற்போது ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 3 போட்டிகள் நடந்துள்ளன.

இந்த 3 போட்டிகளிலும் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. 3 போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. ஆனால் பவுலிங்தான் கை விட்டு விட்டது. எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இந்திய அணியின் பந்து வீச்சு இல்லை. அதேசமயம், ஆஸ்திரேலியா 3 போட்டிகளையும் அழகாக சேஸ் செய்து தொடரை வென்று விட்டது.

எனக்கு நானே சுயப் பரிசோதனை செய்தால்

எனக்கு நானே சுயப் பரிசோதனை செய்தால்

இந்த நிலையில் நேற்று நடந்த 3வது போட்டியின் தோல்விக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது செய்தியாளர்கள் இதுகுறித்து டோணியிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், எனது செயல் திறனை நானே சுயப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தால் அது முரண்பாடாகவே இருக்கும்.

கேஸ்தான் போடனும்

கேஸ்தான் போடனும்

பேசாமல் நான் கேப்டனாக எப்படி செயல்படுகிறேன் என்பதை ஆய்வு செய்ய ஒரு பொது நலன் வழக்கைப் போட்டு விடலாம். அப்போதுதான் சரியாக இருக்கும் என்றார் சிரித்தபடி.

பந்து வீச்சு சரியில்லை

பந்து வீச்சு சரியில்லை

பின்னர் சீரியஸ் குரலுக்கு மாறிய டோணி, நமது அணியின் பந்து வீச்சு தவறாக இருக்கஇறது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. போதிய அனுபவம் உடையவர்களும் இல்லை.

இன்று நான்.. நாளை யாரோ

இன்று நான்.. நாளை யாரோ

இது கேப்டன் குறித்த பிரச்சினை இல்லை. நான் இன்று கேப்டன். நாளை இன்னொருவர். அதை விட முக்கியமானது, அனைத்துத் துறைகளும் சரியாக இருக்க வேண்டியது. அதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நல்ல ஆல்ரவுண்டர் இல்லை

நல்ல ஆல்ரவுண்டர் இல்லை

முதலில் நம்மிடம் நல்ல ஆல்ரவுண்டர் இல்லை. இந்த தொடரைப் பார்த்தால் நமது பந்து வீச்சு எந்த அளவுக்கு அனுபமில்லாதது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இஷாந்த் சர்மாவிடம் ஸ்திரம் இல்லை

இஷாந்த் சர்மாவிடம் ஸ்திரம் இல்லை

இஷாந்த் சர்மா பல சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால் அவரிடம் ஸ்திரத்தன்மை இல்லை. உமேஷ் யாதவ் வருகிறார் போகிறார். மற்றவர்களுக்கு இது அறிமுகத் தொடர்.

கோஹ்லி தேறி விட்டார்

கோஹ்லி தேறி விட்டார்

கோஹ்லி தனது கேரியரில் நன்றாக முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரை இளம் வயதிலிருந்து பார்த்து வருகிறேன். தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய பேட்ஸ்மேன்களில் அவர் சிறந்தவராக இருக்கிறார். ரோஹித் சர்மாவைப் போலவே அவரும் ஸ்திரமாக ஆடி வருகிறார் என்றார் டோணி.

Story first published: Monday, January 18, 2016, 13:31 [IST]
Other articles published on Jan 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+