Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க

மும்பை : கொரோனாவால் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள பௌலர்கள் மீண்டும் ஆட்டத்திற்கு திரும்பும்போது அவர்களை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பௌலர் இர்பான் பதான் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐபிஎல்லா இருந்தாலும் இந்திய அணியா இருந்தாலும் பெளலர்கள் மேல சிறந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய நிர்வாகம் காயம் மேலாண்மையை சிறப்பாக கையாண்டு, பௌலர்களுக்கு காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீவிர கவனம் செலுத்த வேண்டும்

தீவிர கவனம் செலுத்த வேண்டும்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதியிலிருந்து விளையாடாமல் வீட்டில் முடங்கியுள்ளனர் கிரிக்கெட் வீரர்கள். இதையடுத்து தற்போது மீண்டும் போட்டிகளையும் முன்னதாக பயிற்சி ஆட்டங்களையும் நடத்த பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் மைதானத்திற்கு திரும்பும் பௌலர்களை தீவிர கவனத்துடன் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் பௌலர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இர்பான் பதான் எச்சரிக்கை

இர்பான் பதான் எச்சரிக்கை

கடந்த மாதத்தில் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் பல்கார் மாவட்டத்தின் போய்சர் மைதானத்தில் மீண்டும் தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் ஐபிஎல்லாக இருந்தாலும், இந்திய அணியாக இருந்தாலும் பௌலர்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், கடந்த 2 மாதங்களாக முடங்கியுள்ள பௌலர்களுக்கு எளிதாக காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பதான் கூறியுள்ளார்.

சிறப்பான கவனம் வேண்டும்

சிறப்பான கவனம் வேண்டும்

காயம் மேலாண்மை என்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ள பதான், இதைவைத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அனைத்து பௌலர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு ஐபிஎல், இந்திய அணியின் சர்வதேச மற்றும் உள்ளூர் அணிகளில் 15 பேர் கொண்ட டீமில் 4 முதல் 6 பௌலர்கள் உள்ள நிலையில், அவர்கள்மீது சிறப்பான கவனம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐசிசி வழிகாட்டுதல்

ஐசிசி வழிகாட்டுதல்

சர்வதேச அளவில் அணியில் இடம்பெற்றுள்ள பௌலர்கள் மீது தனி கவனத்தை ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் அணியும் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் ஐசிசி தன்னுடைய வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது. பயிற்சி ஆட்டங்களின்போது முதுகுத்தண்டு பிராக்சர் போன்றவை ஏற்படாத வண்ணம் காய மேலாண்மையை அணிகள் பின்பற்ற வேண்டும் என்றும் ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.

Story first published: Thursday, June 4, 2020, 13:36 [IST]
Other articles published on Jun 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+