For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியோட செய்கையை மட்டும் பாருங்க.. இந்த வருசம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு வேற லெவல் கொண்டாட்டம்- ஹைடன்

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் தான் தனது கடைசி போட்டியில் விளையாடுவேன் என்று மகேந்திர சிங் தோனி ஏற்கனவே பல முறை கூறி இருந்தார். தற்போது அவருக்கு வயது 41 ஆகி விட்டதால் , இது தான் தோனியை நாம் பார்க்கும் கடைசி சீசனாக இருக்கலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. முதல் சீசனில் இருந்த வீரர்களில் தற்போது தோனியை தவிர வேறு யாரும் இல்லை.

திட்டம்

திட்டம்

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு மேத்தீவ் ஹைடன் அளித்துள்ள பேட்டியில், சிஎஸ்கேக்கு நடப்பு தொடர் சிறப்பானதாக இருக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சிஎஸ்கே எப்போதும், சிறப்பான ஐடியாக்களை கையாளும் . இம்முறையும் அப்படி ஒரு திட்டத்தை எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

சிஎஸ்கே கேப்டன் தோனி எப்போதும் சில வீரர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்குவார். எனினும் அணியை கட்டமைக்கும் போது தோனியின் வித்தியாசம் உங்களுக்கு தெரியும். தடை காரணமாக 2 ஆண்டுகள் சிஎஸ்கே விளையாடாமல் போனது மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விசயம். அதன் பிறகு திரும்பி வந்த சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

கடைசி முறை

கடைசி முறை

தோனியின் வழி எப்போதுமே தனி வழி. நடப்பு ஆண்டு கடைசி ஆண்டாக தோனிக்கு இருக்கலாம். இதனால் ரசிகர்கள் முன் கவுரவமாக வெளியேறும் எண்ணத்தில் தோனி இருப்பார். இதனால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது கொண்டாட்டங்கள் நிறைந்த மறக்க முடியாத ஆண்டாக அமையும். கடந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், இம்முறை சிஎஸ்கே பலமாக திரும்பி வருவார்கள்.

தோனி பயிற்சி

தோனி பயிற்சி

சிஎஸ்கே அணி தன்னுடைய முதல் போட்டியை வரும் 31ஆம் தேதி அகமதாபாத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியுடன் விளையாடுகிறது. சிஎஸ்கே அணி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி லக்னோ அணியுடன் மோதுகிறது. இந்த தொடருக்காக சிஎஸ்கே அணி ஏற்கனவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Story first published: Saturday, March 11, 2023, 14:20 [IST]
Other articles published on Mar 11, 2023
English summary
Hayden predicts ipl 2023 will be the best season for csk தோனியோட செய்கையை மட்டும் பாருங்க.. இந்த வருசம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு வேற லெவல் கொண்டாட்டம்- ஹைடன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+