Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பை சுட்டிக் காட்டினது தான் தப்பு! அம்பதி ராயுடு மீது பாயும் நடவடிக்கை.. அசாருதீன் அதிரடி!

ஐதராபாத் : ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் தாண்டவமாடுவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவர்மீது நடவடிக்கை எடுக்க ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை அம்பத்தி ராயுடு பதிவு செய்ததையடுத்து, அதன் தலைவர் அசாருதீன் அம்பத்தி ராயுடு விரக்தியடைந்துள்ள கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின்மீது அம்பத்தி ராயுடுவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சங்க செயலாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.

 நான்காவது இடத்தில் களம் கண்டவர்

நான்காவது இடத்தில் களம் கண்டவர்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு, இந்திய அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.

 சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு

தான் உலகக் கோப்பை தொடரில் இடம்பெறாதது குறித்து வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளியிட்ட அம்பத்தி ராயுடு, தொடர்ந்து அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பணம் தாண்டவமாடுகிறது

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அம்பத்தி ராயுடு, ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் தாண்டவமாடுவதாக தெரிவித்திருந்தார். அங்கு பணம் படைத்தவர்களின் ராஜ்ஜியம் கொடி கட்டி பறப்பதாகவும் இதுகுறித்து தெலங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் நடவடிக்கை எடுக்கவும் அவர் கேட்டிருந்தார்.

 அசாருதீன் விமர்சனம்

அசாருதீன் விமர்சனம்

அம்பத்தி ராயுடுவின் இந்த குற்றச்சாட்டை அடுத்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அசாருதீன், அம்பத்தி ராயுடு ஒரு விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர் என்று விமர்சித்திருந்தார்.

 ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

இந்நிலையில், அம்பத்தி ராயுடுவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு, அவர்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.

 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

இந்நிலையில் அம்பத்தி ராயுடு என்ன ஊழல் குற்றச்சாட்டிலா சிக்கினார் என்றும் தன் மனதில் பட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் ஐதராபாத்தின் முன்னாள் ஸ்பின்னர் கவால்ஜீத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இதே கருத்தை ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் இடைக்கால செயலாளர் வெங்கடேஸ்வரனும் பதிவு செய்துள்ளார்.

Story first published: Thursday, November 28, 2019, 19:51 [IST]
Other articles published on Nov 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+