தோனி கூப்பிட்டாரு... அதுமட்டும்தான் தெரியும்... தலைய குனிஞ்சிக்கிட்டு ஓட ஆரம்பிச்சிட்டேன்
மும்பை : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியுடன் தான் பார்ட்னர்ஷிப் அமைத்த சிறப்பான தருணங்களை கேப்டன் விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து இரண்டு வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாவது வீடியோவில் ஜெயிக்க இரண்டு ரன்கள் இருந்தபோது, தோனி எதிர்பக்கத்தில் இருந்து ரன்னிற்காக அழைத்ததாகவும் தான் உடனடியாக எதைப்பற்றியும் யோசிக்காமல் ஓடியதாகவும் கூறியுள்ளார்.
இருவருக்கும் பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் இருந்ததாகவும் அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கோலியின் அடுத்தடுத்த பதிவுகள்
எம்எஸ் தோனியின் ஓய்வு அறிவிப்பையடுத்து விராட் கோலி தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தனக்கு எப்போதும் தோனிதான் கேப்டன் என்று பலவாறாக புகழ்ந்துள்ளார் விராட் கோலி. இந்நிலையில் தற்போது அவர் புதிய வீடியோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அடுத்தடுத்த வீடியோக்கள்
ஐசிசி டி20 உலக கோப்பையில் தானும் தோனியும் பார்ட்னர்ஷிப் அமைத்த போட்டிகளின் வீடியோக்களைதான் அவர் பகிர்ந்துள்ளார். கடந்த 2014ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் வீடியோவையும் இதேபோல கடந்த 2016ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

வீடியோக்கள் மூலம் விவரிப்பு
தோனி மற்றும் தனக்கு இடையில் பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதலை தான் விவரிக்க முடியாது என்றும் கேப்ஷனில் கோலி கூறியுள்ளார். அதனால் அந்த வீடியோக்களை தான் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதல் வீடியோ நெருக்கடி நேரங்களில் தோனியின் சுயநலமில்லாத நடவடிக்கைகளை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதுகுறித்தும் யோசிக்கவில்லை
இதேபோல, மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை இரண்டாவது வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் தாங்கள் இருவரும் இணைந்து 5.1 ஓவர்களில் 67 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் அடித்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவையாக இருந்தபோது, தோனி, ரன்னுக்கு ஓடிவருமாறு கேட்க தான் அதற்காகவே காத்திருந்தது போல ஓடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications