For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இத்தனை நாட்கள் அவரை வீணடிச்சது போதும்.. டீம்ல இடம் கொடுங்க" - லக்ஷ்மன் "வக்காளத்து"

மும்பை: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் எவ்வளவு சாஃப்ட்டான கேரக்டர். அவரே அதிருப்தியோடு சற்று காட்டமாக பேசியிருக்கிறார்.

சூர்ய குமார் யாதவ். இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிகம் ராசியில்லாத வீரர்களில் ஒருவர் எனலாம். வெரைட்டியான ஷாட்ஸ் அடிப்பதில் ஜித்து.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவரது பங்களிப்பு என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. ஒவ்வொரு அடியும் மிரட்டலாக இருக்கும்.

 முக்கிய அளவுகோல்

முக்கிய அளவுகோல்

தற்போது, இலங்கைக்கு சென்றிருக்கும் இந்திய 'ஏ' அணியில் சூர்யகுமார் இடம்பெற்றுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நிச்சயம் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலங்கை தொடரே, உலகக் கோப்பை டி20 தொடருக்கு வீரர்களை தேர்வு செய்யும் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படுகிறது. ஆகையால், அணியில் இடம்பெற்றுள்ள 20 வீரர்களும் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்த தயாராகி வருகின்றனர்.

 என்னை பொறுத்தவரை

என்னை பொறுத்தவரை

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் சூர்யகுமார் குறித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில், "இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. இலங்கை தொடரில், சூர்யகுமார் யாதவ், 3 ஒருநாள் போட்டிகளிலும், 3 டி 20 போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் என்னை பொறுத்தவரை அவர் டி 20 உலகக் கோப்பை அணியில் நிச்சயமாக இடம் பெற தகுதியுள்ளவர்.

 பேட் செய்த விதத்தில்

பேட் செய்த விதத்தில்

எனவே அவர் இதுபோன்ற சர்வதேச லெவல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, அதிக ரன்கள் எடுக்கும் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஏற்கனவே இந்த அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டனர். சூர்யகுமார் யாதவ் 3வது இடத்தில் பேட் செய்த விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்

 நிச்சயம் விளையாடுவார்

நிச்சயம் விளையாடுவார்

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக, அபாரமாக சிக்ஸர் அடித்தது, அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், திறமையையும் அப்பட்டமாக வெளிக்காட்டியது. இத்தனை ஆண்டுகளாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி, இப்போதுதான் சூர்யகுமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை டி20 தொடரில், சூர்யகுமார் நிச்சயம் விளையாட வேண்டும், விளையாடுவார்" என்று லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, July 3, 2021, 20:49 [IST]
Other articles published on Jul 3, 2021
English summary
Laxman on surya kumar yadav - சூர்ய குமார் யாதவ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+