இது ஒரு ஷாட்டா.... நிச்சயம் பதில் சொல்லியே ஆகனும்... கோலி டக் அவுட் குறித்து முன்னாள் வீரர் காட்டம்
சென்னை: இங்கிலாந்துடனான 2வது டெஸ்டில் டக் அவுட்டான விராட் கோலி குறித்து கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இது தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

எப்படி
முதல் டெஸ்டில் விராட் கோலி 72 ரன்கள் அடித்த நிலையில் இப்போட்டியில் மொயின் அலி பந்துவீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது கோலியின் 11வது டக் அவுட்டாகும்.

அதிருப்தி
கோலியின் டக் அவுட் குறித்து பேசிய கம்பீர், ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோலி கவர் ட்ரைவ் ஆடியது தவறான முடிவு. இந்த தவறுக்காக அவர் நிச்சயம் பதில் சொல்லி ஆக வேண்டும் என கூறினார்.

அட்வைஸ்
ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக கவர் ட்ரைவ் ஆட விரும்புவது மிகவும் ஆபத்தானது. அப்படி ஆடினால் ஆஃப் ஸ்டம்பை கவர் செய்து ஆடியிருக்க வேண்டும். ஆனால் கோலி மிடில் ஸ்டம்பில் நின்று ஆடி பந்துவீச்சாளருக்கு இடம் கொடுத்து விட்டார் என கவுதம் கம்பீர் அட்வைஸ் தெரிவித்துள்ளார்.

நிம்மதி
தொடக்க வீரர்கள் கோலி, கில் ஆகியோர் இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறினாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடி வரும் ரோகித் சர்மா 161 ரன்கள் சேர்த்து அணியை மீட்டார். இதே போல் ராஹானேவும் அரை சதம் அடித்து அணிக்கு உதவினார்.


Click it and Unblock the Notifications