அவர் எங்களுக்கெல்லாம் பெரியண்ணா மாதிரி... வாசிம் ஜாபருக்கு அணி வீரர்கள் ஆதரவு
டேராடூன் : ஒரு பயிற்சியாளராக தனக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி சமீபத்தில் உத்தரகாண்ட் அணியின் கோச் வாசிம் ஜாபர் பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில் அவர் மதரீதியான பாகுபாடு காட்டியதாக அணி நிர்வாகம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை அவர் மறுத்துள்ளார்.
இதனிடையே, ஜாபர் அணி வீரர்கள் அனைவருக்கும் பெரியண்ணா போன்றவர் என்று அணி வீரர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பயிற்சியாளர் ஜாபர் ராஜினாமா
உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டில் நியமிக்கப்பட்டவர் வாசிம் ஜாபர். இந்நிலையில் தனது சொல்லுக்கு அணியில் மதிப்பு அளிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜாபர் மறுப்பு
ஆனால் அவர் அணியில் மத ரீதியான பாகுபாடு காட்டியதாக அணி நிர்வாகம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே இதை வாசிம் ஜாபர் மறுத்துள்ளார். தான் அத்தகைய போக்கை கையாண்டிருந்தால் அணி நிர்வாகம் தன்னை விலக்கியிருக்கும் என்றும் ஆனால் தான்தான் தற்போது ராஜினாமா செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜாபருக்கு ஆதரவு
இந்நிலையில் விதர்பா அணியின் வீரர்கள் வாசிம் ஜாபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஞ்சி கோப்பை போட்டிகளின் 2 வெற்றியில் அணியை வழிநடத்திய பையஸ் பாசல், வாசிம் ஜாபர் அணி வீரர்களுக்கு பெரியண்ணா போன்றவர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் மீதான இந்த குற்றச்சாட்டு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அக்ஷய் வாத்கர் பாராட்டு
இதனிடையே, வாசிம் ஜாபர் சிறப்பான, திறமையான வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார் என்று அணியின் விக்கெட் கீப்பர் அக்ஷய் வாத்கர் தெரிவித்துள்ளார். ஜாபர் அனைவரிடமும் சமமாக பழகுவார் என்றும் அவர் மத ரீதியான பாகுபாடு காட்டியிருப்பார் என்று தான் கருதவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications