பயத்த காட்டிட்டான் பரமா... ரிஷப் பண்ட் காட்டடி... புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் ரிஷப் பண்ட்-ன் மிரட்டல் குறித்து முன்னாள் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.
முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா, ரஹானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 329 ரன்கள் சேர்த்தது. ஆதே போல் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் இங்கிலாந்தை மிரட்டி அரை சதம் அடித்தார்.
இந்நிலையில் பண்ட் பேட்டிங்கின் போது எதிரணி கேப்டன் அச்சத்தில் இருப்பார் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் பட்சர் தெரிவித்துள்ளார்.

மிரட்டல்
முழுவதும் பந்துவீச்சுக்கு சாதகமானதாக சென்னை மைதானம் இருந்ததால் ரோகித், ரஹானே ஆகிய அனுபவம்மிக்க வீரர்கள் நேர்த்தியாக கையாண்டனர். அதே வேளையில் அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் ரிஷப் பண்ட் மிகவும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார்.

பொறுப்பு
பண்ட் ஒரு பக்கம் அதிரடியாக ஆடினாலும் மறுமுனையில் வீரர்கள் வெளியேறிக்கொண்டே இருந்தனர். இதனால் அவர், ஒவ்வொரு ஓவரிலும் கடைசி பந்தில் சிங்கிள் அடித்துக்கொண்டு அடுத்த ஓவரில் ஸ்டிரைக் எடுத்தது பாராட்டப்பட்டது.

புகழாரம்
பண்ட் ஆட்டம் குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் பட்சர், அணியில் சேர்க்கப்பட்டதில் இருந்து ரிஷப் பண்ட் தொடர்ந்து வியக்க வைக்கிறார். அவரின் அதிரடி ஆட்டம் எதிரணி கேப்டனுக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.

பண்ட் கீப்பிங்
விக்கெட் கீப்பிங்கில் பண்ட் நிறைய முன்னேற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனினும் லோ ஆர்டர் பேட்ஸ்மேன்களுடனும் பேட்டிங் சிறப்பாக செய்வதால் அவர் இருப்பது அணிக்கு சிறப்பான ஒன்று.


Click it and Unblock the Notifications