
லைன் அன்ட் லெந்த்
ஜெயதேவ் உனட்கட் பற்றித் தான் பேசுகிறோம். உண்மையின் நல்ல பவுலர், திறமையான பவுலர். ஆனால், லேட் பிக்கப் கேட்டகரி பவுலர். இத்தனை வருடங்களாக கிரிக்கெட் விளையாடியும், கடந்த 2, 3 ஆண்டுகளாக தான் பீக் ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக, இந்த 2021 ஐபிஎல் தொடரில், தனது லைன் அண்ட் லெந்த் பவுலிங்கில் தாறுமாறாக அசத்தினார்.

ரஞ்சி ஹீரோ
அதுமட்டுமின்றி, 2019-20 ரஞ்சி கிரிக்கெட் சீசனில், தனி ஆளாக 67 விக்கெட்டுகளை அறுவடை செய்த உனட்கட், ஒரு கேப்டனாக சவுராஷ்டிரா அணி கோப்பையை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், சமீபத்தில் எந்த இந்திய அணியின் தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக, இந்தாண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் உனட்கட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. அதே போல், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் சேர்க்கப்படவில்லை. தான் தேர்வு செய்யப்படாதது குறித்த அதிருப்தியையும் அவர் பேட்டிகளில் வெளிப்படுத்தி இருந்தார்.

பதில் சொல்லுங்க
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய சவுராஷ்டிராவின் அணியின் பயிற்சியாளராக இருந்த கர்சன் கவ்ரி, "ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியின் போது (2019-20) பிசிசிஐ அணி தேர்வாளர் ஒருவரிடம் நான், 'ஒரு பந்து வீச்சாளர் 60 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து தனது அணியை ரஞ்சி டிராபியின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒருவருக்கு, குறைந்தபட்சம் இந்திய அணியில் இடமளிக்க வேண்டாமா? என்று கேட்டேன்.

எத்தனை ஆண்டுகள்
அதற்கு அந்த தேர்வாளர் என்னிடம், "உனட்கட் இனி இந்தியாவுக்கு தேர்வு செய்யப்பட மாட்டார். 30- வயதுக்கு மேற்பட்ட வீரர்களை நாம் தேர்வு செய்வதில்லை" என்றார். அதற்கு நான், 'ஏன் 30+ வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்று கேட்டதற்கு, "வயதான வீரர்களை அணியில் தேர்வு செய்வதால், அவர்களால் நீண்ட காலத்திற்கு அணிக்காக பணியாற்ற முடியாது. 21, 22 அல்லது 23 வயது வீரரை தேர்வு செய்தால், அவரால் 12 ஆண்டுகள் வரை கூடஅணிக்காக பங்காற்ற முடியும். உனட்கட் அணிக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவரால் எத்தனை ஆண்டுகள் அணிக்காக விளையாட முடியும்? என்றார்' என கோச் கர்சன் கவ்ரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











