Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Aus vs Eng result: என் வாழ்நாளில் அடைந்த சிறந்த வெற்றி இது.. ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பெருமிதம்

பர்மிங்ஹாம்: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் முதல் போட்டியில் அடைந்துள்ள வெற்றி, என் வாழ்க்கையின் சிறந்த வெற்றி என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரில் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ, அதனை முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு கொடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஹெட்டிங்லே போட்டியில் நிகழ்ந்த சம்பவம் அப்படியே மாறி ஆஸ்திரேலிய அணி நிகழ்ந்துள்ளது. இதனிடையே இங்கிலாந்து ரசிகர்கள் "Boring Aussie.. Boring" என்று வம்புக்கு இழுக்க, களத்தில் சலனமே இல்லாமல் வெற்றியை தேடி கொடுத்தார் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ்.

Headingley oss always hurts and Now this victory is Most satisfying one says Australia Captain Pat Cummins

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறுவதற்கு முதல் காரணம் உஸ்மான் கவாஜா என்றால், இரண்டாவது காரணம் கேப்டன் பேட் கம்மின்ஸ்தான். இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 44 ரன்கள் விளாசியும் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். அதேபோல் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டத்தை முறியடிக்க வழக்கம் போல் ஆடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டே போதுமானது என்று ஆஸி. அணி நிரூபித்து காட்டியுள்ளது.

இந்த வெற்றி குறித்து ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், இந்த வெற்றி 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் ஹெட்டிங்லே போட்டியை நினைவுபடுத்தவில்லை என்று கூறினால் அது பொய்தான். அந்தப் போட்டியில் வெற்றியை நழுவவிட்டது எப்போதும் சோகத்தையே கொடுக்கும். ஆனால் இன்று இந்த வெற்றி மருந்தாக அமைந்துள்ளது. ஓய்வறையில் உள்ள வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நிச்சயம் நம்பர் 1 அணி நாங்கள்தான் என்று நிரூபித்துள்ளோம். அதேபோல் என் வாழ்க்கையில் அடைந்த மிகச்சிறந்த வெற்றி இதுதான்.

கடந்த 2 ஆண்டுகளாக 20 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வருகிறோம். நாங்கள் எங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, சிறந்த அணியாக இருக்கிறோம். இந்த மைதானத்தில் ரசிகர்கள் எங்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் சில கோஷங்கள் எழுப்பினார்கள். ஆனால் அதனையும் மீறி எளிதாக வெற்றியை பெற்றுள்ளோம். ஒருவேளை முதல் நாளில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யவில்லை என்றால், இன்றைய நாளில் நான் அரைசதம் விளாசி இருப்பேன் என்று தெரிவித்தார்.

Story first published: Wednesday, June 21, 2023, 10:04 [IST]
Other articles published on Jun 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+