போன வருஷம் மாதிரியே கடைசி 5 ஓவர்களில் எதிரணியை வச்சி செய்வோம்.. பொங்குகிறார் புவனேஸ்வர்குமார்
ஹைதராபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியுடன் இன்று இரவு தொடங்கும் 10வது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் பலப் பரிட்சை நடத்த உள்ளது.
ஹைதராபாத்தின் பெஸ்ட் பவுலர் புவனேஸ்வர்குமார் கடந்த ஆண்டு அந்த அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். கடைசி கட்ட ஓவர்களில் அவரது பந்து வீச்சை அடிப்பது எதிரணியினருக்கு பெரும் சவாலாக இருந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடைசி கட்ட ஓவர்கள்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். கடைசி நான்கு அல்லது ஐந்து ஓவர்களில் சிறப்பாக செயல்படுவதுதான் டி20 போட்டி ஒரு ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும்.
கடந்த ஆண்டை போலவே இம்முறையும் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பரிணமிக்க முழு முயற்சி எடுப்போம் என்றார்.
Story first published: Wednesday, April 5, 2017, 17:22 [IST]
Other articles published on Apr 5, 2017


Click it and Unblock the Notifications