Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹெலிகாப்டர் ஷாட்டை இனி பார்க்கவே முடியாதா? தோனிக்கு என்ன பிரச்சனை.. யார்க்கருக்கு திணறுவது ஏன்?

சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிஎஸ்கே வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சந்தீப் சர்மா வீசிய யார்க்கர் பந்தை தோனியால் சிக்சர் அடிக்க முடியவில்லை. அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

Health and Yorker issue of CSK Captain MS Dhoni against Rajasthan in IPL 2023

"இளமை இனிமேல் போகாது.. அட முதுமை எனக்கு வாராது" முத்து படத்தில் ரஜினிகாந்திற்காக எழுதப்பட்ட பாடல் வரிகள் தான் இது. நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக கடைசி நேரத்தில் பவுண்டரி அடிக்க முடியாமல் சென்னை அணி தோல்வியடைந்தது. இருப்பினும் தோனி 17 பந்துகளில் 3 சிக்சர்கள், ஒரு பவுண்டர் உட்பட 32 ரன்களை தோனி விளாசியது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. 41 வயதாகியும் தோனி களத்தில் எதிரணிக்கு மரண பயத்தை காட்டிவிட்டார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

தோனிக்கு இளமை குறையாது என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். தோனி மரண பயத்தை காட்டியது எவ்வளவு உண்மையோ, அதே அளவிற்கு யார்க்கர் பந்துகளுக்கு தோனி திணறியதும் உண்மை. கடைசி பந்தில் சந்தீப் சர்மா வீசிய யார்க்கரை 2018ஆம் ஆண்டு வீசி இருந்தால், பந்து சேப்பாக்கம் மைதானத்தில் கேலரியில் தஞ்சம் புகுந்திருக்கும். ஆனால் நேற்றையப் போட்டியில் ஒரு ரன்னை மட்டுமே தோனியால் எடுக்க முடிந்தது. அதற்கு வயது முதிர்வால் ஏற்படும் பக்க விளைவுகள் தான் காரணம்.

Health and Yorker issue of CSK Captain MS Dhoni against Rajasthan in IPL 2023

41 வயதாகும் தோனியால், அதிகமாக குனிந்து பந்துகளை அடிக்க முடியாது. நேற்றையப் போட்டியில் கூட கிரீஸின் உள்ளேயும் நிற்காமல், வெளியேவும் நிற்காமல் வழக்கம் போல் தோனி ஸ்டாட்டில் வீசப்படும் பந்துகளை அடிப்பதற்காக நின்று கொண்டிருந்தார். ஒரு பந்தை கூட அடிக்க முடியாத என்ற கேள்விக்கு, ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக ஆடிய போது டெத் ஓவரில் கிரீஸின் உள்ளே தள்ளி நிற்பார். ஆனால் இப்போது சில மருத்துவ சிகிச்சைகளுக்கு பின் தவிர்த்து வருகிறார். அதேதான் தோனிக்கும் பொருந்தும்.

இனி ஹெலிகாப்டர் ஷாட்களை ஆடுவது தோனிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. அதனால் யார்க்கர்களை வீச பயந்த பந்துவீச்சாளர்கள் இனி தைரியமாக தோனிக்கு சில யார்க்கர்களை இந்த சீசனில் வீசுவதை பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் நேற்றையப் போட்டியில் தோனிக்கு முழங்கால் காயத்துடன் களமிறங்கியுள்ளாஅர். அதன் காரணமாகவே ஜடேஜா ஸ்ட்ரைக்கில் இருந்தும் ஒருமுறை கூட தோனி 2 ரன்களை ஓட முயற்சிக்கவில்லை. அதனால் போர் கண்ட சிங்கம் வலியுடன் தனது கடைசி ஆட்டத்தை ஆடி வருவதாகவே ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

Story first published: Thursday, April 13, 2023, 10:03 [IST]
Other articles published on Apr 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+