Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, நியூசி. போட்டி ரத்தாகிறது என தகவல்…!! காரணம் இது தான் ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Recommended Video

மழையால் நிறுத்தப்பட்ட இலங்கை வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி

லண்டன்:பலத்த மழை எச்சரிக்கையால், இந்தியா, நியூசிலாந்து போட்டி ரத்தாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் எந்தளவுக்கு எதிர்பார்ப்புடன் தொடங்கியதோ.... அதே அளவுக்கு சில விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக கை காட்டப் படுவது மழை. பலத்த மழையால் பல முக்கிய ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அணி நிர்வாகமும், ரசிகர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

குறிப்பாக, 7ம் தேதி பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால், மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு போட்டியும் அப்படித் தான். தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் சவுத்தாம்டனில் மோதிய ஆட்டம் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கை விடப்பட்டது.

டாஸ் இல்லாமல் ரத்து

டாஸ் இல்லாமல் ரத்து

வங்கதேசம், இலங்கை இடையேயான ஆட்டம் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது. இதேபோல ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் சவுதாம்ப்டனில் மோத உள்ள ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் அதிகம்

பார்வையாளர்கள் அதிகம்

மற்ற போட்டிகளை விட, இந்தியா விளையாடும் போட்டிகளில் பார்வையாளர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக நேரில் சென்று கண்டு களிப்பவர்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம். இந்தியா, தமது அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

70% வாய்ப்பு கிடையாது

70% வாய்ப்பு கிடையாது

வரும் 13ம் தேதி நாட்டிங்காமில் இந்த போட்டி நடைபெற உள்ளது. ஆனால் பலத்த மழை எச்சரிக்கையால் போட்டி நடக்க 70 சதவீதம் வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது. போட்டி நடைபெற உள்ள பகுதியில் தீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை பெய்யும்

மழை பெய்யும்

வானிலை அறிவிப்பின் படி, போட்டி தொடங்கும் முந்தைய நாளில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்படியே அந்த மழை குறைந்து போட்டி நாளான வியாழன்று மதியம் முற்றிலும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிவிப்பு

வானிலை அறிவிப்பு

இங்கிலாந்தின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய் யவாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் வெப்பநிலையானது 13 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே தான் இருக்கும். குறைந்தபட்சமாக 11 டிகிரி வரை செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம் என்று வானிலை மையம் கூறியிருக்கிறது.

புதிய தகவல்கள்

புதிய தகவல்கள்

எனவே, இந்தியா, நியூசி. அணிகள் இடையேயான முக்கியமான போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்றும் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு சிக்கல்

இந்தியாவுக்கு சிக்கல்

ஆனால்... அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை. ஒரு வேளை மழை நிற்கா விட்டால், ஆட்டம் கைவிடப்பட்டு ஆளுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும் என்று தெரிகிறது. அதன் படியே, போட்டி ரத்து செய்யப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நியூசி.க்கு எந்த சிக்கல் இருக்காது. மாறாக இந்திய அணிக்கு பாதிப்பாக இருக்கும் என்று கருதப் படுகிறது.

Story first published: Wednesday, June 12, 2019, 12:10 [IST]
Other articles published on Jun 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+